iPhoneகளில் 5G சேவையை Activate செய்வது எப்படி? புதிய iOS 16.2 வசதிகள் என்ன?

ஆப்பிள் நிறுவனம் அதன் iPhone 12 சீரிஸ் மேல் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5G சேவை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11.30PM முதல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் 5G சேவை என்பது Jio மற்றும் Airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம் கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5G இணைய சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அதன் போன்களில் iOS 16.2 வெர்ஷனை வழங்கியுள்ளது. இதனால் 5G சேவை கிடைக்கும் நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த 5G சேவையானது iPhone 12, iPhone 13, iPhone 14 என புதிய மாடல்கள் அனைத்திலும் கிடைக்கும். இதைத்தவிர புதிய iPhone SE மாடலிலும் இந்த வசதி கிடைக்கும்.

5G சேவை எப்படி Activate செய்வது?

முதலில் உங்களின் ஐபோனை திறந்து அதில் இருக்கும் ‘Settings’ ஆப்ஷனுக்கு செல்லவும். பின்னர் General ஆப்ஷனுக்கு சென்று ‘Software Update’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதனால் உங்களுக்கு புதிய iOS 16.2 வெர்ஷன் டவுன்லோட் ஆகும். பின்னர் Install செய்யவும்.புதிய அப்டேட் ‘install’ ஆனதும் உங்களின் போனை ரீஸ்டார்ட் செய்யவும். பின் Cellular ஆப்ஷன் சென்று Data ON செய்யவும். இதை நீங்கள் Jio, Airtel என எந்த சிம் மூலமாகவும் செய்யலாம்.இதில் நீங்கள் தேவை ஏற்பட்டால் ‘Default Auto’ மோடில் வைக்கலாம். இதன்மூலம் உங்களின் ஐபோன் தானாகவே 4G மற்றும் 5G சேவைகளுக்கு மாற்றிக்கொள்ளும். இதனால் உங்களின் போன் பேட்டரி கூடுதலாக நிலைத்திருக்கும். இல்லையென்றால் நீங்கள் 5G அல்லது LTE என இரு ஆப்ஷன்களில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

புதிய iOS 16.2 எப்படி உள்ளது?

இந்த புதிய OS அப்டேட் 5G சேவை மட்டுமல்லாமல் சில புதிய வசதிகளையும் கொண்டுள்ளது.

Freeform

இதில் புதிதாக Freeform என்ற ஆப் உள்ளது. இதில் நாம் நேரடியாக எழுதவும், வரையவும் முடியும். இந்த புதிய ஆப் iPads, iPhones, Macs என அனைத்திலும் கிடைக்கும். இதை நாம் Apple Pencil கொண்டும் பயன்படுத்தலாம்.

Apple Music Sing

இது ஒரு புதிய Karaoke மோட் கொண்ட ஆப் ஆகும். இதில் நாம் நமக்கு பிடித்தமான பாடல்களை பாடலாம். பாடல்களில் வரிகள் நமக்கு நம்முடைய திரையில் தெரியும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

SOS via Satellite

இது உலகில் நாம் எங்கு இருந்தாலும் நம்முடைய இடத்தை ‘Satellite’ மூலம் துல்லியமாக காட்டும் ஒரு வசதி ஆகும். இது தற்போது iPhone 14 சீரிஸ் போன்களில் மட்டுமே கிடைக்கிறது.

மற்றவை

ஆப்பிள் நிறுவனம் அதன் UI டிசைனில் மாற்றம் செய்து புதிய மேம்படுத்தப்பட்ட ‘Lock screen’, ‘Notifications’, ‘Always on Display’ போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ‘Airdrop’ பயன்படுத்தி நாம் மற்றொருவருக்கு data பகிர்வது தற்போது நேரம் குறைக்கப்பட்டு 10 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.

‘Game center ‘மூலம் இனி நமது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கண்காணிக்க முடியும். கூடுதலாக ‘Sleep’ மற்றும் ‘Medication Widget’ வசதி, சுலபமாக ‘Message’ ஆப் மூலம் போட்டோக்களை எடுப்பது, ‘iCloud’ மேம்பாடு, விபத்து ஏற்பட்டால் அறிவதற்கான ‘Crash Detection’ போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.