வடகொரிய அதிபரின் தந்தையின் 11-வது நினைவு தினம் அனுசரிப்பு – ராணுவ வீரர்கள், பொதுமக்கள் அஞ்சலி

பியோங்யாங்,

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல், கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி உயிரிழந்தார். அவரத் தொடர்ந்து அவரது மகனான கிம் ஜாங் அன் அதிபர் பதவியை ஏற்றார்.

இந்த நிலையில் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்-ன் 11-வது நினைவு தினம் வடக்கொரியாவில் அனுசரிக்கப்பட்டது. இதில் அந்நாட்டின் பொதுமக்களும், ராணுவ வீரர்களும் அவரது சிலைகளுக்கு கீழ் மலர் வளையங்களையும், பூங்கொத்துகளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.