Top 10 Smartphones 2022: இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் 2022! iPhone கிடையாது!

இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டு மிகவும் அதிகரித்துவிட்டது. அதில் மிகவும் முக்கிய அங்கமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மாறிவிட்டது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதிய வசதிகள் கொண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.

அதில் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியாகி பயனர்கள் பலரின் மனம் கவர்ந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இவை பயனர்களின் பயன அனுபவம், வசதிகள், திறன், கேமரா வசதிகள், Value for Money போன்றவற்றை எல்லாம் கணக்கிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

​1.Google Pixel 7 Proஇந்தியாவிலேயே சிறந்த ஸ்மார்ட்போன் என்றால் அது கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான Pixel 7 Pro ஆகும். பிரீமியம் போன் செக்மென்ட்டில் ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய போன் Google Pixel 7 Pro ஆகும்.
இதில் ஒரு வளைவான Curve டிஸ்பிலே வசதி, Google tensor G2 Processor, 12GB RAM, சிறந்த கேமரா, சிறந்த பயன அனுபவம், Google Stock Android OS என அனைத்திலும் நம்பிக்கை அளிக்கிறது. இந்த போன் தற்போது வெளியிடப்பட்ட போன்களிலேயே சிறந்த போனாக உள்ளது.Display- 6.70 இன்ச் , 1440 x 3120 PixelsProcessor- Google tensor G2RAM- 12GBStorage- 128GBMain camera- 50+48+12MPSelfie camera-10.8MPStarting Price-84,999 rupees
​2.Apple iPhone 14 ProGoogle நிறுவனத்திற்கு நேரடி போட்டியாளராக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 14 சீரிஸ் போன்களில் வெளியிடப்பட்ட iPhone 14 Pro பட்டியலில் இரண்டாம் இடம்பிடிக்கிறது. இந்த போன் ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த டிசைன், தொழில்நுட்ப வசதிகள், கேமரா, பேட்டரி திறன், iOS, புதிய வசதிகள் என அனைத்திலும் அசத்துகிறது.
புதிதாக அல்ட்ரா வைட் கேமரா, Dynamic Island போன்ற புதிய சிறப்பு வசதிகள் இந்த போனில் இடம்பெற்றுள்ளன. ஆனால் விலை அம்சத்தில் Google Pixel 7 Pro போனை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.Display- 6.10 இன்ச் , 1179 x 2556 PixelsProcessor- Apple A16 BionicRAM- 6GBStorage- 128GBMain camera- 48+12+12MPSelfie camera-12MPStarting Price-1,29,900 rupees
​3.Samsung Galaxy Z Fold 4உலகில் Google மற்றும் Apple ஆகிய நிறுவனங்களுக்கு நிகராக ஒரு நிறுவனம் உள்ளது என்றால் அது சாம்சங் நிறுவனம் மட்டுமே. இந்த நிறுவனத்தின் Galaxy சீரிஸ் தற்போது புதுப்பிக்கப்பட்டு மடக்கும் வசதி கொண்ட போனை சாம்சங் வெளியிட்டது.
இந்த Samsung Z Fold 4 சிறந்த டிசைன் மற்றும் டெக்னாலஜி அம்சம் கொண்டுள்ளது. இதில் சிறந்த கேமரா, snapdragon சிப், அட்டகாசமான டிஸ்பிலே வசதி, சிறந்த பயன்பாட்டு அனுபவம் போன்ற அனைத்தும் ஒரு சேர கிடைக்கின்றன. ஆனால் இவற்றிற்கு எல்லாம் விலை உள்ளது. அது சற்று அதிகமாக உள்ளது.Processor- Qualcomm Snapdragon 8 Gen 1RAM- 12GBStorage- 256GBBattery- 4400 mAhMain camera- 50+12+10MPSelfie camera-10+4MPStarting Price-1,54,999 rupees
​4.Motorola Edge 30 Fusionபட்டியலில் யாரும் எதிர்பாராத விதமாக இடம்பெற்றுள்ள இன்னொரு போன் இந்த Motorola Edge 30 Fusion. Google நிறுவனத்தின் Stock Android நிகரான OS வசதி, சிறந்த டிசைன் மற்றும் கட்டமைப்பு, மோட்டோ போன்களில் இருக்கும் தனிப்பட்ட வசதிகள், Snapdragon 888+ SOc சிப், பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் என பயனர்களுக்கு முக்கிய தேவையாக இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
கேமரா திறன் சற்று மேம்பட்டிருந்தால் இன்னும் சிறப்பான போனாக இது இருந்திருக்கும். ஆனால் வரும் காலத்தில் OS அப்டேட் மூலம் செய்யப்படலாம்.Display- 6.55 இன்ச் , 1080 x 2400 PixelsProcessor- Qualcomm Snapdragon 888+RAM- 8GBStorage- 128GBBattery- 4400 mAhMain camera- 50+13MPSelfie camera-32MPStarting Price-39,999 rupees
​5.Google Pixel 7கூகுள் நிறுவனத்தின் தலைசிறந்த போனான Pixel 7 Pro மாடலின் சிறிய ரக போன் இந்த Pixel 7. அந்த போனை விட குறைவான கேமரா அளவு இருந்தாலும் முக்கிய வசதிகள் அனைத்தையும் வழங்குகிறது.
இதிலும் அதே Google Stock Android வசதி, சிறந்த பேட்டரி, டிசைன், இருந்தாலும் சார்ஜிங் வேகம் குறைவு. ஆனால் இந்த விலைக்கு ஏற்ற சிறந்த Google போன் இது.Display- 6.30 இன்ச் , 1080 x 2400 PixelsProcessor- Google Tensor G2RAM- 8GBStorage- 128GBMain camera- 50+12MPSelfie camera-10.8MPStarting Price-54,880 rupees
​6.Samsung Galaxy Z Flip 4நாம் அனைவரும் ஒரு காலத்தில் Flip வகை போன்களை பார்த்து அதை வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்போம். இது பயன்படுத்த சிறப்பாகவும், ஸ்டைலாகவும் இருக்கும்.
முக்கியமாக காம்பாக்ட் போனாக நாம் நமது சிறிய பாக்கெட் உள்ளேயும் இவற்றை வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி அடைந்த பின்னர் அவை மறக்கப்பட்டுவிட்டன. தற்போது மீண்டும் அதேபோன்ற ஸ்டைல் போன்களை பல நிறுவனங்கள் விற்பனையை செய்தாலும் அதில் தலைசிறந்த போனாக இருப்பது இந்த Galaxy Z Flip 4 ஆகும்.இதில் பிரீமியம் டிசைன், சிறந்த பேட்டரி திறன், சிறந்த processor, OS, கேமரா வசதிகள், புதிய தொழில்நுட்ப வசதிகள் என பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் போட்டோ திறன் மேலும் அதிகரிக்கப்படவேண்டும்.Processor- Qualcomm Snapdragon 8 Gen 1RAM- 8GBStorage- 128GBBattery- 3700 mAhMain camera- 12+12MPSelfie camera-10MPStarting Price-89,999 rupees
​7.Asus ROG Phone 6
இந்தியாவின் சிறந்த கேமிங் போனாக இருப்பது Asus மட்டுமே. இதற்காகவே எட்ஜ் வசதி கொண்ட டிஸ்பிலே, பாஸ்ட் சார்ஜிங், கேமரா, LED பேனல், சிறந்த பேட்டரி வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது.ஆனால் இதில் Android 12, இரவு நேர சராசரி கேமரா திறன் போன்றவை இந்த போனை ஏழாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.Display- 6.78 இன்ச் , 1080 x 2448 PixelsProcessor- Qualcomm Snapdragon 8 Gen 1RAM- 12GBStorage- 256GBBattery- 6000 mAhMain camera- 50+13MPSelfie camera-12MPStarting Price-39,999
​8.Oppo reno 8 Proபிரீமியம் ஸ்மார்ட்போன் போன கிளாஸ் மற்றும் மெட்டல் கலந்து உருவாக்கப்பட்ட போன் இந்த Reno 8 Pro ஆகும். இதில் சிறந்த டிஸ்பிலே, பிரீமியம் டிசைன், கேமரா போன்ற பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி நமக்கு இதில் பேட்டரி அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
Display- 6.70 இன்ச் , 2412 x 1080 PixelsProcessor- Mediatek Dimensity 8100 5GRAM- 12GBStorage- 256GBBattery- 4500 mAhMain camera- 50+8+2MPSelfie camera-32MPStarting Price-44,990 rupees
​9.Vivo X80 ProVivo நிறுவனத்தின் தலைசிறந்தஹ் போனாங்க இருக்கு இந்த போன் கேமரா திறனுக்கு பெயர் போன ஒரு போன். இதில் Snapdragon 8 Gen 1 SOC, 6.78 இன்ச் எட்ஜ் டிஸ்பிலே, பாஸ்ட் சார்ஜிங் வசதி, சிறந்த கேமிங் என அனைத்தும் உள்ளன.
Display- 6.78 இன்ச் , 1440 x 3200 PixelsProcessor- Qualcomm Snapdragon 8 Gen 1RAM- 12GBStorage- 256 GBBattery- 4800 mAhMain camera- 50+48+12+8MPSelfie camera-32MPStarting Price-79,999 rupees
​10.Motorola Edge 30 Proஇதிலும் சிறந்த பெரிய டிஸ்பிலே, 144HZ refresh rate, Snapdragon 8 Gen 1 SoC, பாஸ்ட் சார்ஜிங் வசதி, சிறந்த OS, சிறந்த கேமரா, பிரீமியம் டிசைன் மற்றும் தரம் போன்றவை உள்ளன.
Display- 6.70 இன்ச் , 1080 x 2400 PixelsProcessor- Qualcomm Snapdragon 8 Gen 1RAM- 8GBStorage- 128GBBattery- 4800 mAhMain camera- 50+50+2MPSelfie camera-60MPStarting Price-39,999 rupees
OPPO-Reno விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Snapdragon 710சேமிப்பகம்128 GBகேமரா48 MP + 5 MPபேட்டரி3765 mAhடிஸ்பிளே6.4″ (16.26 cm)ரேம்8 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.