India Tech 2022: இந்தியாவின் டெக்னாலஜி சாதனைகள் 2022!

இந்த ஆண்டு இப்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நாம் இந்த ஆண்டு இந்தியாவின் டெக்னாலஜி வளர்ச்சிகள் என்ன என்பது குறித்து கட்டாயம் பார்த்தாகவேண்டும். பல புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் ஆகியுள்ளன. அவை அனைத்தும் நாட்டு மக்களின் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டவை. அவற்றின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

​இந்தியாவில் 5Gஉலகில் முன்னணி நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட 5G இணைய சேவை இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் இந்த 5G சேவை ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அறிமுகம் செய்தன.2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5G சேவை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்தது. இந்த 5G சேவையால் இந்தியா மேலும் பல உயரங்களை தொடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
​புதிய டெக் விதிமுறைகள்இந்திய அரசு முதல் முறையாக டெக்னாலஜி நிறுவனங்களுக்காக புதிய விதிகளை நிறுவியது. அதன்படி வாடிக்கையாளர்களின் விவரம் பாதுகாப்பு, அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளுக்கும் ஒரே சார்ஜ்ர் கருவி போன்ற விதிகள் அமல்படுத்தப்பட்டன.
​iphone மற்றும் SemiConductor தயாரிப்புசீனாவை மட்டுமே நம்பியிருந்த ஐபோன் மற்றும் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பை இந்தியாவிற்கு டாடா நிறுவனம் கொண்டுவந்தது. ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து செமி கண்டக்டர் சிப் தயாரிப்பும் Foxconn நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பிலும் ஈடுபட டாடா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
​உலகம் முழுவதும் UPIஇந்தியாவில் பிரபலமாக இருந்த UPI பணப்பரிவர்த்தனை முறை இந்தியாவில் வளர்ச்சி அடைந்ததை பார்த்த மற்ற நாடுகள் இதே போன்ற UPI முறையை அறிமுகம் செய்தன. குறிப்பாக நேபால், பூட்டான், UAE, பெல்ஜியம், நெதர்லாந்து, UK ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டன.
​டிஜிட்டல் ரூபாய்நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டின் அதே மதிப்பு அடங்கிய டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிமுகம் இந்திய ரிசர்வ் வங்கியின் சாதனைகளில் ஒரு மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.