Narain: 12 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தை.. விமரிசையாக பெயர் சூட்டும் விழா நடத்திய நடிகர் நரேன்!

நடிகர் நரேன் தனது மகனின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

நடிகர் நரேன்தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நரேன். மலையாள மொழியில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் நரேன் இயக்குனர் மிஷினின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை, கோ, முகமூடி, கைதி உள்ளிட்ட பல நடித்துள்ளார்.Nayanthara: மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா… கலக்கல் க்ளிக்ஸ்!
விக்ரம் படத்தில்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுக்களை குவித்தார். சுசீந்திரனின் சாம்பியன் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் நரேன். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார் நரேன். Anchor DD Marriage: என்னது… மும்பை தொழில் அதிபரோடு டிடிக்கு கல்யாணமா?
12 ஆண்டுகளுக்கு பிறகுநடிகர் நரேன் மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளரான மஞ்சு ஹரிதாஸ் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 14 வயதில் தன்மயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் நரேன். தனக்கு மகன் பிறந்திருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாதம் அறிவித்தார் நரேன்.Tunisha Sharma: கர்ப்பமாக இருந்தாரா நடிகை துனிஷா ஷர்மா… பகீர் கிளப்பும் பிரேத பரிசோதனை அறிக்கை!
பெயர் சூட்டும் விழாஇந்நிலையில் தனது மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ள நரேன், அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது மகனின் பெயரையும் அறிவித்துள்ளார் நடிகர் நரேன். அதன்படி தனது மகனுக்கு நடிகர் நரேன், ஓம்கார் நரேன் என பெயர் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் நரேனுக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.Mahalakshmi Ravindar: 8வது அதிசயம் என் பொண்டாட்டிதான்.. உருகிய ரவீந்தர்.. அதுக்கும் மேல போன மகாலட்சுமி!
Narain

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.