அசாமில் ஆலங்கட்டி மழை 4,000 வீடுகள் சேதம்| 4,000 houses damaged by hailstorm in Assam

திப்ரூகர் : அசாமில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து, அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திப்ரூகர், சாரெய்டியோ, சிவசாகர், டின்சுகியா மாவட்டங்களில் உள்ள 132 கிராமங்களில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், மிகப்பெரிய பனிக்கட்டிகள் வீடுகள் மீது விழுந்தன. இதில், 4,483 வீடுகள் சேதமடைந்தன; 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆலங்கட்டி மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்கி வருகிறது’ என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.