Whatsapp செயலியில் புதிய வசதி அறிமுகம்! உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு!

உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெசேஜ் செயலியான Whatsapp தற்போது புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிதாக ‘Accidental Delete’ வசதியும் இப்பொது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே
‘Delete for Everyone’
வசதி மூலம் நாம் ஏற்கனவே அனுப்பிய மெசேஜ் டெலீட் செய்யமுடியும்.
‘Delete for me’
வைத்து நமக்குள் டெலீட் செய்யவும் ‘Delete for everyone’ அடுத்தவருக்கு என இரு வகைகளிலும் டெலீட் செய்யலாம்.

தற்போது புதிதாக
‘Accidental Delete’
வசதியை அறிமுகம் செய்துள்ளது. நாம் தவறுதலாக யாருக்காவது மெசேஜ் அனுப்பிவிட்டால் நமக்கு 5 நொடிகள் அவகாசம் கிடைக்கும். அதில் நாம் Delete for everyone பயன்படுத்தி தவறான மெசேஜ் டெலீட் செய்யமுடியும்.

தெரியாமல் ‘Delete for Me’ கொடுத்துவிட்டால் Undo ஆப்ஷன் மூலம் ‘Delete For Everyone’ ஆப்ஷனை பயன்படுத்தலாம்.இந்த புதிய வசதி Android மற்றும் iOS என இரு போன்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி நிச்சயம் அனைவருக்கும் பயன்படும்.

‘Accidental Delete For Everyone’ பற்றி முக்கிய குறிப்புக்கள்

இந்த வசதியை பயன்படுத்த நீங்களும் உங்களின் Whatsapp மெசேஜ் பெற்றவரும் புதிய சமீபத்திய Whatsapp வெர்ஷன் பயன்படுத்துயிருக்கவேண்டும்.iOS பயன்படுத்துபவர்களின் Media உள்ளே தவறுதலாக நீங்கள் அனுப்பிய போட்டோ Delete for Everyone பயன்படுத்திய பிறகும் பதிவாகியிருக்கும்.நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெசேஜ் யாருக்கு அனுப்பினீர்களோ டெலீட் செய்யும் முன்பு அவர்களால் பார்க்கமுடியும்.Delete for Everyone வெற்றிகரமாக டெலீட் ஆகவில்லை என்றால் உங்களுக்கு எந்த ஒரு நோட்டிபிகேஷன் மெசேஜ் கிடைக்காது.நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெசேஜ் டெலீட் செய்ய உங்களுக்கு 2 நாட்கள் வரை அவகாசம் கிடைக்கும்.ஒரு Group உள்ளே தவறுதலாக அனுப்பிய மெசேஜ் டெலீட் செய்ய Group Admin மட்டுமே செய்ய முடியும்.Group Admin ஒரு மெசேஜ் டெலீட் செய்தால் அந்த group உள்ளே இருப்பவர்களால் பார்க்கமுடியும்.Group Admin ஒரு முறை Delete செய்தவற்றை மீண்டும் உங்களால் திரும்ப பெறமுடியாது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.