காட்டில் மனைவி…கணவர் மறதி | Wife in forest…husband forget

கணவரின் மறதியால் நடுக்காட்டில் மனைவி பல மணி நேரம் தவித்தார்.

தாய்லாந்தை சேர்ந்த தம்பதி பூண்டோம் சாய்மூன் 55, – அம்னுவாய் சாய்மூன் 49. விடுமுறைக்காக இவர்கள் மஹா சரகம் பகுதியிலுள்ள சொந்த ஊருக்கு காரில் சென்றனர். நள்ளிரவில் நடுக்காட்டில் இயற்கை உபாதைக்காக பூண்டோம் காரை நிறுத்தியுள்ளார். மனைவியும் இறங்கியுள்ளார். அதை பூண்டோமிடமும் கூறியுள்ளார். அதை மறந்துவிட்ட பூண்டோம் மனைவி வருவதற்குள் காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

புதருக்குள் சென்ற அம்னுவாய் திரும்பிவந்து பார்த்தபோது காருடன் கணவரையும் காணவில்லை. அவரது அலைபேசியும் காரிலேயே வைத்துவிட்டார். அதிகாலை நேரம் என்பதால் இருட்டில் யாரிடமும் உதவி கேட்க முடியாமல் கதறி அழுதிருக்கிறார்.

காட்டு விலங்குகள் நடமாட்டமும் இருந்துள்ளது. இதனால் பயத்துடன் நடக்கத்துவங்கிய அம்னுவாய் அதிகாலை 5:00 மணிக்கு 20 கி.மீ., நடந்து பிரதான சாலைக்கு வந்துள்ளார். அங்கே இருந்த ஒருவரிடம் அலைபேசியை பெற்று கணவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் காரை ஓட்டிக்கொண்டிருந்த அவர் போனை எடுக்க வில்லை. பின்னர் போலீசார் உதவியுடன் கணவரை போனில் பிடித்தார். அதற்குள் பூண்டோம் 160 கி.மீ., சென்றுவிட்டார்.

பின்னர் அவரை வரவழைத்து விசாரித்தனர். காரின் பின்சீட்டில் மனைவி அயர்ந்து தூங்குகிறார் என்ற நினைத்து சென்றுவிட்டதாக பூண்டோம் போலீசாரிடம் கூலாக தெரிவித்தார். போலீசார் அவரை கண்டித்து மனைவியை ஒப்படைத்தனர்.

மனைவி இறங்கியது கூட தெரியாமல் கணவருக்கு இப்படி ஒரு மறதியா என பலரும் பூண்டோமை விமர்சித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.