அதிமுக யாருக்கு? வெள்ளைக்கொடிக்கு வெற்றியா? எடப்பாடிக்கு அத்தனை பக்கமும் நோ என்ட்ரி!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வர வாய்ப்புகள் உள்ளன, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரது ரியாக்‌ஷன் என்ன என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு தேதி!அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரத்துக்குள் வழக்கை முடிக்க நினைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள நிலையில் இன்றுடன் விசாரணை நிறைவடைந்து, இரு தரப்பு வாதங்களையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு தேதியை அறிவித்து ஒத்திவைக்கலாம் அல்லது தேதி குறிப்பிடப்படபடாமல் ஒத்தி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு சாதகமாக வரும்?தீர்ப்பு விரைவில் வெளியாகிவிடும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இவர்களில் யாருக்கு சாதகமாக வரும், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இவர்களின் தற்போதைய மனநிலை என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கட்சியை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு இருவரது சம்மதத்துடனே முடிவுகள் எடுக்கப்பட்டு வந்தன.
2026 வரை இதுதான் நிலைமை!2021ஆம் ஆண்டு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு இருவரும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 2026 வரை இவர்களது பதவிக்காலம் இருக்கிறது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அவசர கதியில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்யப்பட்டதும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்ததும், ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கியதும் நடைபெற்றது. தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரிலேயே கடிதம் அனுப்பி வருகிறது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு!இந்த சூழலில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருவரும் எதிரும் புதிருமாக நின்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.ஆனால் எடப்பாடி பழனிசாமியோ சமரசமாக செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி முடிவு இதுதான்!இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூட்டப்படுகிறது. அந்த கூட்டத்தில் தனக்கு அருகே எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்தால் சபையை புறக்கணித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருவதாக சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழி இல்லையா?ஆரம்பம் முதலே வெள்ளைக்கொடி காட்டி வரும் ஓபிஎஸ்ஸுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்துவிட்டால், எடப்பாடி பழனிசாமிக்கு இறங்கி வருவதைத் தவிர வேறு வழி இருக்காது. ஏற்கெனவே டெல்லி கொடுத்து வரும் அழுத்தமும் சேர்ந்து கொண்டால் எடப்பாடி இணைப்புக்கு சம்மதித்தே ஆகும் சூழல் உருவாகும். சின்னம் முடக்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும். இவை அனைத்தும் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.