நவாஸ் ஷெரீப் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் சிகிச்சை| Nawaz Sharifs daughter undergoing treatment in Switzerland

ஜெனீவா பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், தொண்டை அறுவை சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நம் அண்டை நாடான பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகளும், பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவருமான மரியம், 49, ஆகியோர், சமீபத்தில் ஐரோப்பியா நாடான சுவிட்சர்லாந்து சென்றனர்.

மரியமுக்கு தொண்டையில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, ஜெனீவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது தொண்டையில் உள்ள இரண்டு சுரப்பிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நவாஸ் ஷெரீப்பும், ஜெனீவாவில் உள்ள இதய நோய் மருத்துவரை சந்திக்க உள்ளார். பின் நவாசும், மரியமும் ஜெனீவாவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே, நாளை ஜெனீவாவில் நடக்கும் பருவகால மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பாக்., பிரதமரும், நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் செல்லவுள்ளார்.

மரியமையும், நவாஸ் ஷெரீப்பையும் அவர் சந்தித்துப் பேசுவார் என தெரிகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.