Apple Smartwatch: 16 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

உலகில் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. பல நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச் செக்மென்ட்டில் களம் இறங்கி புதுப்புது ஸ்மார்ட் வாட்ச் என பலவற்றை அறிமுகம் செய்துவருகின்றன.

இவ்வளவு ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆனாலும் அதில் தலைசிறந்த ஸ்மார்ட் வாட்ச் என்றால் அது Apple Smartwatch மட்டுமே. இந்த ஸ்மார்ட் வாட்ச் இதுவரை பல உயிர்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மனிதர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து அவர்களை மருத்துவமனை செல்ல அறிவுறுத்தியும் உடம்பில் இருக்கும் பிரச்னைகளை ஆராய்ந்து கூறியும் காப்பாற்றி உள்ளது.

லீ என்ற பெண் செய்தியாளர் ஒருவரின் 16 வயதான மகன் அவர்கள் ஸ்கையிங் செல்லும் முன்பாக உடம்பு சரியில்லை என்று கூறியுள்ளான். பின் சிறிது நேரத்தில் அவன் உதடு மற்றும் கைகள் நீல நிறத்தில் மாறியுள்ளன.

இதனால் உடனடியாக அவனது கையில் ஆப்பிள் வாட்ச் ஒன்றை கட்டி உடம்பில் இருக்கும் Oxygen Saturation Level போன்றவற்றை ஆராய்ந்துள்ளார். அதில் வெறும் 66% மட்டுமே உடம்பில் Oxygen அளவு இருந்துள்ளது.

பின் இணையத்தில் 88% கீழ் உடம்பில் Oxygen அளவு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பின் அந்த சிறுவனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று Oxygen அளவை சோதனை செய்து பார்த்ததில் 67% மட்டுமே இருந்துள்ளது. துல்லியமாக Oxygen அளவை ஆப்பிள் வாட்ச் காட்டியுள்ளது.

பின் அந்த சிறுவனின் ஈரலில் நீர் உள்ளது என்றும் இதற்கு காரணம் High Altitude Pulmonary Edema (HAPE) என்றும் இதனால் மரணம் கூட ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சரியாக ECG, Stress, Oxygen Level, BP, இதய துடிப்பு போன்றவற்றை துல்லியமாக காட்டுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிள் வாட்ச் உள்ளே இருக்கும் ECG சென்சார் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட்டு அதை வைத்து Machine learning தொழில்நுட்பம் மூலம் துல்லியமாக உடல் ஆரோக்கியத்தை கணக்கிடுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே இந்த கணிப்பும் சரியாகி இருந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.