வாட்ஸ் அப் வழியே அரசின் திட்டங்கள்.. அறிந்துகொள்வது எப்படி..?; முழு விவரம்..!

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் விதமாக தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தத் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பல பேருக்கு தெரிவதில்லை. இதனால், தகுதியுடைய மக்கள் அரசு வழங்கும் பயன்களை பெற முடியாமல் இருக்கின்றனர். மேலும், திட்டங்களை அறிந்தாலும் அதன் மூலமாக எவ்வாறு பயன் அடைவது என்பது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை.

இதனை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள அரசின் திட்டங்களை பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு, ‘மக்கள் நலன் bot’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் இதனை தங்களது ஸ்மார்ட் போன் மூலமாக தொடர்பு கொண்டு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் மூலம் திட்டங்களை எப்படி தெரிந்துகொள்வது என்பதை இங்கே காண்போம்.

1. மக்கள் நலன் bot திட்டத்தின் 9445879944 என்ற whatsapp எண்ணை முதலில் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அதன்பின் வாட்ஸ் அப் ஓபன் செய்து ஹாய் என்ன மெசேஜ் அனுப்ப வேண்டும்.

3. அடுத்ததாக, உங்களது மொழி, பாலினம், சமூகம், மதம் மற்றும் ஆண்டு வருமானம் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

4. நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையை பொறுத்து அதில் உள்ள திட்டங்கள் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.