Airtel, Jio, BSNL வருட ரீசார்ஜ் திட்டங்கள்! ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!

இணையதள பயன்பாடு அதிகம் இருக்கும் இந்தியாவில் பயனர்களின் தேவைகள் என்பது மாறுபடுகிறது. ஒருவருக்கு சிறிய டேட்டா இருந்தால் போதுமானது என்று நினைப்பார்கள். இன்னொருவர் அதிக அளவு டேட்டா தேவைப்படும் நபராக இருப்பார்.

இதற்காகவே டெலிகாம் நிறுவனங்கள் ஒரு ரீசார்ஜ் திட்டத்தில் பல ஆப்ஷன்கள் வழங்கி பயனர்களை கவர்ந்துவருகிறார்கள். குறிப்பாக முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் அடிக்கடி புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துவருகின்றன.

இந்த வரிசையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் BSNL நிறுவனமும் இப்பொது சேர்ந்துகொண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு BSNL நிறுவனம் அதன் 4G மற்றும் 5G என இரு சேவைகளையும் ஒரேநேரத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களின் வருட ரீசார்ஜ் திட்டங்களை ஒப்பீடு செய்து இதில் சிறந்த திட்டமாக எது இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

Airtel வருட ரீசார்ஜ் திட்டங்கள்

இந்த நிறுவனம் அதன் பயனர்களுக்கு மூன்று வருட ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. 3359 ரூபாய், 2999 ரூபாய், 1799 ரூபாய் என மூன்று ஆப்ஷன்களில் நமக்கு கிடைக்கிறது.

3359 ரூபாய் திட்டம்

இந்த திட்டமானது நமக்கு ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா, 1 வருடத்திற்கான Prime Video Mobile சேவை, 1 வருடத்திற்கான Disney + Hotstar Mobile, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் SMS போன்ற வசதிகள் உள்ளன. வருட ரீசார்ஜ் திட்டங்களிலேயே OTT சேவையுடன் கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டமாக இந்த ஏர்டெல் 3359 ரூபாய் திட்டம் உள்ளது.

2999 ரூபாய் திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டத்தில் நமக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் SMS வசதி போன்றவை கிடைக்கின்றன.

1799 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் மூலம் நமக்கு வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ், 3600SMS வசதி மற்றும் மொத்தமாக 24GB டேட்டா கிடைக்கிறது. இந்த சேவைகளுடன் நமக்கு தனியாக Data Add-On வசதியும் கிடைக்கும்.

Jio வருட ரீசார்ஜ் திட்டங்கள்

வருட ரீசார்ஜ் திட்டங்களாக ஜியோ நிறுவனம் மூன்று ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது. மொத்தம் மூன்று வருட ரீசார்ஜ் திட்டங்கள் இருந்தாலும் அதில் ஒரு திட்டமான 2545 ரூபாய் திட்டம் 336 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். இதனால் அதை நீக்கிவிட்டு மீதம் இருக்கும் இரு திட்டங்களை மட்டும் பார்க்கலாம்.

2999 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் மூலம் நமக்கு 2.5GB டேட்டா ஒரு நாளைக்கு, அன்லிமிடெட் வாய்ஸ், SMS வசதி கிடைக்கிறது. இதனுடன் இப்போது புத்தாண்டு சலுகை என்று கூடுதலாக 75GB டேட்டா சேர்த்துள்ளது. இதனால் நமக்கு இந்த ரிச்சார்ஜ்ர் திட்டத்தில் கூடுதல் டேட்டா பயன்படுத்தமுடியும்.

2879 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் மூலம் நமக்கு 2GB டேட்டா ஒரு நாளைக்கு மேலும் அன்லிமிடெட் வாய்ஸ், SMS போன்ற வசதிகள் கிடைக்கின்றன. ஜியோ திட்டத்தில் எந்த ஒரு கூடுதல் OTT சேவையும் இடம்பெறவில்லை.

BSNL வருட ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற போட்டியாளர்களுக்கு நடுவே BSNL நிறுவனம் இன்னும் 4G சேவை கூட வழங்காமல் பின்தங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு அந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் BSNL நிறுவனம் அதன் 4G மற்றும் 5G சேவையை இந்தியாவில் தொடங்கும் என்று தெரிகிறது.

1,515 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் மூலம் நமக்கு 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டா வசதி கிடைக்கிறது. இது 3G சேவை ஆகும்.

1,999 ரூபாய் திட்டம்

இதன் மூலம் நமக்கு மொத்தமாக 600GB டேட்டா கிடைக்கிறது. இதனால் நமக்கு 365 நாட்கள் டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS வசதி போன்றவை கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் நமக்கு கூடுதலாக 30 நாட்களுக்கு Eros Now வசதி கிடைக்கும்.

2,399 ரூபாய் திட்டம்

இதில் ஒரு வருடம் முழுவதும் ஒரு நாளைக்கு 2GB டேட்டா வரை பயன்படுத்தும் வகையில் வசதிகள் உள்ளன. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS ஒரு நாளைக்கு, 30 நாட்கள் Eros Now OTT போன்றவை கிடைக்கின்றன.

2,999 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் மூலம் நமக்கு ஒரு நாளைக்கு 3GB டேட்டா கிடைக்கிறது. இதிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS வசதி இடம்பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.