உங்க கட்சியினரை கைது செய்ய போலீசார் ரொம்ப சிரமப்பட வேண்டாம்… ரெண்டு ஆட்டோ பிடிச்சா போதும்!| speech, interview, statement

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி:

தமிழகத்தில், கவர்னர் ரவி பொறுப்பேற்றதில் இருந்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், நாட்டின் பாரம்பரியத்திற்கு விரோதமாகவும் நடந்து வருகிறார்.

இதன் உச்ச நிலையாக, சட்டசபையில் மரபுகளை மீறி பேசி, வெளிநடப்பு செய்துள்ளார். கவர்னர் ரவி, தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். மத்திய அரசு, அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் வரும், 20ம் தேதி கவர்னர் மாளிகை முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

* உங்க கட்சியினரை கைது செய்ய போலீசார் ரொம்ப சிரமப்பட வேண்டாம்… ரெண்டு ஆட்டோ பிடிச்சா போதும்!

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:

திராவிட மாடலில், போதை ஒழிப்பு என்பது, கண் துடைப்பாகவே உள்ளது. நிகழ்ச்சிகளில் பேசுவதால் மட்டும், கஞ்சா ஒழிந்து விடும் என்று, முதல்வர் ஸ்டாலின் எண்ணாமல், நடவடிக்கையில் இறங்க வேண்டும். கஞ்சா விற்பனைக்கு உதவும் காவல் அதிகாரிகளை, நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.

கஞ்சா விற்பனையில் ஈடுபடும், கட்சி நிர்வாகிக்கு தண்டனை வாங்கித்தர, கட்சிக்குள் தனிக்குழு அமைக்க வேண்டும். என்ன நடக்குமோ என்று துாக்கம் வரவில்லை என்று பேசுவதை விடுத்து, குற்றம் செய்பவர்களை துாங்க விடாதீர்கள். அதுவே, மக்களை பாதுகாக்கும் ஆட்சியாகும்.

ஆழ்ந்த, அற்புதமான யோசனைகள் தான்… ஆனா, செயல்படுத்துறவங்க என்ன சிந்தனையில் இருக்காங்க என்பது தெரியலையே!

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

கவர்னர் உரையின் போது, தமிழக சட்டசபையில் நடந்திருக்கும் சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை. தமிழக சட்டசபை வரலாற்றில், இன்றைய நிகழ்வுகள், ஒரு கரும்புள்ளியாகி விட்டன.

கவர்னருக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையே தொடரும் மோதல் போக்கு, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு, மக்களுக்கும், மாநிலத்திற்கும் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

‘மைக் உடைப்பு, சட்டை கிழிப்பு, எம்.ஜி.ஆர்., மீது செருப்பு வீச்சு’ என, இதை விட மோசமான சம்பவங்கள் எல்லாம், தமிழக சட்டசபையில் நடந்த வரலாறு இருக்குது!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

சிலர் போல, சட்டையை கிழித்துக் கொண்டு நாடகமாடி வெளியேறாமல், தன் இருக்கையில் இருந்து, சிங்கம் போல கவர்னர் வெளியேறுவது தான் தேசிய மாடல்.

latest tamil news

கவர்னரை பா.ஜ.,வின் ஊதுகுழல் என, தி.மு.க.,வினர் திட்டுவதற்கு மூல காரணமே, நீங்க இப்படி எல்லாம் முரட்டுத்தனமா அவருக்கு முட்டு கொடுப்பது தான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.