தமிழ்நாடு காவல்துறையினருக்கு  பொங்கல் பதக்கங்கள் –  தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை வெளியிட்டுள்ளார்.

மேலும், பதக்கங்கள் பெறும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு அவரவர் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

2023 பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் அல்லது பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தமிழ்நாட்டில் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்கிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு காவல்துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமை காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் முன்னணி தீயணைப் போர், சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) மற்றும் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 118 அலுவலர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் நிலைகளில் 60 பேர்களுக்கும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணி பதக்கங்கள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடு இன்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-, 2023 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்பநாய் படை பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு நபர்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.