சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி: அடுத்தடுத்து உடைக்க காத்து இருக்கும் பெருமைகள்!





Courtesy: BBC Tamil

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

சதம் விளாசிய விராட் கோலி

 
இந்தியா-இலங்கை இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர்.

மேலும் இந்திய அணியின் இந்த வெற்றி ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற தகுதியைப் பெற்றுள்ளது.

சச்சின் சாதனை முறியடிப்பு

இலங்கைக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 110 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் என விளாசி 166 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 21 சதங்களுடன் கோலி முந்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 100 போட்டிகளிலேயே அதனை தாண்டியுள்ளார்.

சதத்தில் சச்சினை முந்த வாய்ப்பு

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின் தொடர்கிறார்.

இலங்கைக்கு எதிரான இந்த சதத்தின் மூலம் கோலிக்கு இது ஒருநாள் கிரிக்கெட்டில் 46-வது சதமாகவும், அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தத்தில் 74-வது சதமாகவும் இது பதிவாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.