நெருப்பு கோளமான விமானம்… மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்த பயணி: திக் திக் நிமிடங்கள்

நேபாளத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் நெருப்பு கோளமான விமானத்தின் பயணி ஒருவர் மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உயிருடன் தப்பவில்லை

நேபாளத்தில் 72 பேர்களுடன் பயணப்பட்ட விமானம் நெருப்பு கோளமான நிலையில், அதில் எவரும் உயிருடன் தப்பவில்லை என தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் இந்தியர்கள் ஐவர், நண்பர்கள் சேர்ந்து நேபாளத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

நெருப்பு கோளமான விமானம்... மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்த பயணி: திக் திக் நிமிடங்கள் | Nepal Plane Crash Doomed Passengers Final Moments

@reuters

இதில் ஒருவர் விமானம் தரையிறங்கும் போது தமது பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்துள்ளார்.
அந்த நேரலையானது மரணத்தின் கடைசி நொடியாக தற்போது பதிவாகியுள்ளது.

திகிலடையவைக்கும் காணொளி

நண்பர்கள் ஐவரும் அந்த பேஸ்புக் நேரலையில் விமானம் தரையிறங்கப்போகும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது பதிவாகியுள்ளது.
அந்த காணொளியில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தடுமாறுவதும், பின்னர் இமயமலையில் போகாரா பள்ளத்தாக்கில் மோதியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நெருப்பு கோளமான விமானம்... மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்த பயணி: திக் திக் நிமிடங்கள் | Nepal Plane Crash Doomed Passengers Final Moments

@reuters

தொடர்புடைய காணொளியை பதிவு செய்தவர் 29 வயதான சோனு ஜெய்ஸ்வால் எனவும், 5 நண்பர்கள் சேர்ந்து நேபாளத்தில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த காணொளியில், வாடிக்கையாக தரையிறங்கும் விமானம், திடீரென்று நெருப்பு கோளமாவதும் அலறல் சத்தமும் பதிவாகியுள்ளது.

திடீரென்று நெருப்பு கோளமாவதும்

நேபாளத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விமான விபத்து என்றே கூறுகின்றனர்.
உள்ளூர் நேரப்படி ஞாயிறன்று பகல் 10.50 மணியளவில் விபத்தில் சிக்கிய இந்த விமானத்தில், 68 பயணிகள் உட்பட அனைவரும் பலியாகியுள்ளனர்.

நெருப்பு கோளமான விமானம்... மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்த பயணி: திக் திக் நிமிடங்கள் | Nepal Plane Crash Doomed Passengers Final Moments

@reuters

சோனு ஜெய்ஸ்வால் மற்றும் நண்பர்கள் என ஐவர், நான்கு ரஷ்யர்கள், அயர்லாந்து நாட்டவர் ஒருவர், தென் கொரிய நாட்டவர் இருவர், அவுஸ்திரேலியா,பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா நாட்டவர்கள் தலா ஒருவர் என மொத்தம் 10 வெளிநாட்டவர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

மரணமடைந்தவர்கள் முதலில் அடையாளம் காணப்பட்டவர் 33 வயதான பயண பதிவர் எலினா பாண்டுரோ என தெரியவந்துள்ளது.
அவரது சமூக ஊடக பக்கத்தில் தற்போது அஞ்சலி பதிவுகளால் நிரம்பியுள்ளது.

விமான விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் தகவலுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் நிலையில், மீட்புப் படையினர் தீவிரமாக உடல்களைத் தேடி வருகின்றனர்.

நெருப்பு கோளமான விமானம்... மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்த பயணி: திக் திக் நிமிடங்கள் | Nepal Plane Crash Doomed Passengers Final Moments

@reuters

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.