30 ஆண்டுகளுக்கு பிறகு…இத்தாலியின் மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவன் அதிரடி கைது


இத்தாலியில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவர்

இத்தாலியில் கடந்த 30 ஆண்டுகளாக பொலிஸாரிடம் இருந்து தப்பியோடி கொண்டு இருக்கும் இத்தாலியின் மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ(Matteo Messina Denaro), இறுதியாக அந்த நாட்டின் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1993ம் ஆண்டு முதல் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடி கொண்டு இருக்கும் 60 வயதான மெசினா டெனாரோ, சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவனாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த சில காலமாக மெசினா டெனாரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொண்டு இருந்த நிலையில், சிசிலிய தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இத்தாலிய செய்தி நிறுவனமான அன்சா வழங்கிய தகவலில்,  மற்ற நோயாளிகளின் பாதுகாப்பை காக்க ஒரே இரவில் காவல்துறை அதிகாரிகளை ரகசியமாக கட்டிடத்திற்குள் நுழைந்தனர் என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் இத்தாலிய செய்தி நிறுவனங்கள் மெசினா டெனாரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளன.

30 ஆண்டுகளுக்கு பிறகு…இத்தாலியின் மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவன் அதிரடி கைது | Italys Mafia Boss Matteo Messina Denaro ArrestedSky News

இதையடுத்து மெசினா டெனாரோ பலேர்மோவில் (Palermo) உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், உடனடியாக ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று இத்தாலி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை தொடர்பாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெளியிட்ட தகவலில், கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இதன்மூலம் “மாஃபியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு கைவிடாது என்பதை காட்டும் பெரிய வெற்றி” என தெரிவித்துள்ளார். 

30 ஆண்டுகளுக்கு பிறகு…இத்தாலியின் மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவன் அதிரடி கைது | Italys Mafia Boss Matteo Messina Denaro ArrestedMessina Denaro (Italian Police/LaPresse/AP)


இரட்டை ஆயுள் தண்டனை

1992 ஆம் ஆண்டு மாஃபியா எதிர்ப்பு வழக்கறிஞர்களான ஜியோவானி ஃபால்கோன் மற்றும் பாவ்லோ போர்செல்லினோ ஆகியோரின் கொலைகளில் மெசினா டெனாரோவின் பங்கிற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் அடுத்த ஆண்டு  10 பேரைக் கொன்ற புளோரன்ஸ், ரோம் மற்றும் மிலனில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் மெசினா டெனாரோவின் பங்கிற்காக மற்றொரு ஆயுள் தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.

30 ஆண்டுகளுக்கு பிறகு…இத்தாலியின் மோஸ்ட் வான்டட் மாஃபியா தலைவன் அதிரடி கைது | Italys Mafia Boss Matteo Messina Denaro ArrestedSky News

மெசினா டெனாரோ 1990 களில் நடந்த பல கொலைகளுக்கு தனியாக அல்லது கூட்டாக பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டார்.

30 ஆண்டுகளாக பொலிஸாரிடம் இருந்து தப்பியோடி வாழ்ந்து வந்த மெசினா டெனாரோ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.