லெனோவா Yoga 9i இன்டெல் i7 லேப்டாப் அறிமுகம்! இந்தியாவின் முதல் 13வது ஜெனரேஷன் கருவி!

இந்தியாவில் ப்ரீமியம் லேப்டாப் செக்மென்ட்டில் 2 இன் 1 மாடலில் லெனோவா நிறுவனம் புதிய 4K OLED டிஸ்பிலே கொண்ட லேப்டாப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த லேப்டாப் 4 விதங்களில் பயன்படுத்தலாம். இதனுடன் நமக்கு Lenovo Precision Pen 2 கிடைக்கிறது.

இந்த லேப்டாப் உள்ளே Intel நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான 13வது ஜெனரேஷன் i7 Processor இடம்பெற்றுள்ளது. இந்த லேப்டாப் Lenovo Yoga series 2in1 கருவிகளில் பிரீமியம் செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிலேஇந்த கருவியில் 4K (3840×2400 Pixels)/2.8K (2880×1800 Pixels) OLED 60HZ டச் ஸ்க்ரீன் வசதி உள்ளது. இதில் கூடுதலாக DisplayHDR TrueBlack 500, Dolby Vison மற்றும் 400நிட்ஸ் பிரைட்னஸ் அளவு உள்ளது.
Processor வசதிஇந்த லேப்டாப் 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில் 13th Gen Intel Core i7- 1360P Processor, 12 cores (4 Performance + 8 efficient)/16 threads உள்ளது.
சிறப்பம்சங்கள்இந்த கருவியில் Intel நிறுவனத்தின் புதிய Iris XE Graphics வசதி உள்ளது. இதனால் நாம் பெரிய அளவு வீடியோ எடிட்டிங், கேமிங் போன்றவற்றை செய்தாலும் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது.
பேட்டரி மற்றும் கேமரா வசதிஇந்த லேப்டாப் உள்ளே ஒரு 2MP FHD+IR ஹைபிரிட் கேமரா வசதி உள்ளது. இதனுடன் பாதுகாப்பிற்காக Privacy Shutter வசதி உள்ளது. இதில் 75WH பேட்டரி வசதி உள்ளதால் தொடர்ந்து நாம் 10 மணிநேரம் இதனை பயன்படுத்தலாம். இது 1.4 கிலோ எடை கொண்டுள்ளது.
மற்ற வசதிகள்இதில் Gen 2 Headphone jack வசதி, 4 ஸ்பீக்கர் மற்றும் Dolby Atmos Support, Glass TouchPad, WiFi 6E, ப்ளூடூத் 5.2, 5.0GHZ P Core, 3.7GHZ E Core வசதி கொண்டுள்ளது.
விலை விவரம்இந்த லேப்டாப் 1,74,990 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த லேப்டாப் Croma, Reliance Stores Amazon ஷாப்பிங் தளங்களில் ஜனவரி 29 முதல் விற்பனை செய்யப்படும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.