செல்பி எடுத்து ரூ.6000 அபராதம் கட்டிய நபர்: வந்தே பாரத் ரயிலில் நடந்த கூத்து| Man Who Boarded Vande Bharat Train To Take Selfie: 159 KM As Automatic Door Closes Travel

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விஜயவாடா: வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஆசைப்பட்ட நபர் ஒருவர், தானியங்கி கதவுகள் மூடியதால் டிக்கெட் பரிசோதகரிடம் ரூ.6000 அபராதமும் கட்டியதுடன் 159 கி.மீ தூரம் பயணித்து அடுத்த ரயில் நிலையத்தில்தான் இறங்கியுள்ளார்.

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை பலரும் ஆர்வமுடம் பார்த்துச் செல்கின்றனர். அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ஒரு நபர் ‘செல்பி’ ஆசையில் ரயிலில் ஏறியுள்ளார். செல்பி எடுத்து இறங்குவதற்குள் ரயிலின் தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டன.

latest tamil news

இதனால் பதறிய அந்நபர், கதவை திறக்க முயன்றும் முடியவில்லை. அதற்குள்ளாக ரயிலும் கிளம்பியது. இதனால் செய்வதறியாத நபர், 159 கி.மீ தொலைவில் அடுத்த ரயில் நிலையத்தில் (விஜயவாடாவில்) தான் இறங்கியுள்ளார்.

மேலும் டிக்கெட் இல்லாமல் பயணித்த குற்றத்திற்காக பரிசோதகர் அவருக்கு ரூ.6000 அபராதமும் விதித்துள்ளார். செல்பி மோகத்தால் சிக்கலில் சிக்கி ரூ.6000 அபராதமும் கட்டிய அந்நபருக்கு இது சிறந்த பாடம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.