திருட்டு குற்றச்சாட்டு: 4 பேரின் கைகளை துண்டித்த தலிபான்கள்| Taliban Publicly Cut Off Hands Of 4 Men Over Alleged Theft Charges

காபூல்: திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரின் கைகளை பொது மக்கள் முன்னிலையில் தலிபான்கள் துண்டித்துள்ளனர்.

காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில் வைத்து திருட்டில் ஈடுபட்டதாக 9 பேருக்கு தலிலான்கள் கசையடி கொடுத்ததாக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. காந்தஹார் மக்கள் முன்னிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், ஒவ்வொரு குற்றவாளிக்கும் 35 முதல் 39 கசையடிகள் வழங்கப்பட்டன என்றும் கவர்னரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆனால், தற்போது லண்டனில் வசிக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான ஷபானா நசிமி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காந்தஹார் கால்பந்து மைதானத்தில் பொது மக்கள் முன்னிலையில் திருட்டில் ஈடுபட்டு கைதான 4 பேரின் கரங்கள் துண்டிக்கப்பட்டன. ஆப்கனில், மக்களுக்கு கசையடி, கை, கால் துண்டிப்பது , உயிரை எடுப்பது போன்ற கொடூர தண்டனைகள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். சர்வதேச சமூகங்களில் பல்வேறு அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் தலிபான்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் எனக்கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.