Shahrukh Khan: உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்! ஷாருக்கானுக்கு எந்த இடம் தெரியுமா?

பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் விரைவில் ‘பதான்’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள்முன் வர உள்ளார். தனது நடிப்பால் உலகையே ஆண்டவர் நடிகர் ஷாருக்கான். அந்தவகையில் தற்போது உலக புள்ளிவிவரங்கள் வெளியிட்ட உலகின் எட்டு பணக்கார நடிகர்களின் பட்டியலின் படி, டாம் குரூஸ், ஜாக்கி சான் மற்றும் ராபர்ட் டி நீரோ, ஜார்ஜ் குளூனி போன்ற நடிகர்களை மிஞ்சி ஷாருக் முன்னோக்கி வந்துள்ளார். மேலும் இந்தப் பட்டியலின்படி ஷாருக்கானின் சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணக்கார நடிகர்கள்
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் டைலர் பெர்ரி, மூன்றாவது இடத்தில் டுவைன் ஜான்சன் உள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக ஷாருக்கான் நான்காவது இடத்திலும், டாம் குரூஸ் 620 மில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 

பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற நடிகர்கள்

டாம் குரூஸ்: ₹50 மில்லியன் 
ஜாக்கி சான்: ($520 மில்லியன்)
ஜார்ஜ் குளூனி: ($500 மில்லியன்)
ராபர்ட் டி நிரோ: ($500 மில்லியன்)

பெரும் ஹாலிவுட் நடிகர்களையே பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான் நான்காவது இடத்தில் இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரது பதான் திரைப்படம் வைரலாகி கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். 

ஷாருக் கான் நடிக்கும் ‘பதான்’

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இது தவிர நடிகர் ஷாருக் கான் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சமீபத்தில் படத்தின் இயக்குனர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.