”10 ஆண்டுகள் கணவர் போல் வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றுகிறார்” – மதபோதகர் மீது பெண் புகார்!

திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி பத்தாண்டுகள் நட்பாய் பழகிவிட்டு ஏமாற்றியதாக மதபோதகர் மீது மதுரையை சேர்ந்த பெண் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்துவிட்டு மத போதகர் ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் மத போதகரால் தனக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவில், “நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக நட்பாக பழகி திருமணம் செய்துகொள்வதாய் கூறி கணவர் போல் வாழ்ந்து வந்தார். எனக்கு தெரியாமல் சென்னையைச் சேர்ந்த பிளசி என்ற பெண்ணை சாமுவேல் திருமணம் செய்துகொண்டுள்ளார். என்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றி கொண்டிருந்தார். 
image
நான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளால் என்னை திட்டுகிறார். செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துவைத்து இருப்பதாகவும் ஏதாவது பேசினால் அந்தப் படங்களை வெளியிடுவேன் எனவும் என்னை பலமுறை என்னை மிரட்டி வருகிறார். அதனை வைத்து எனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் என்னை அடித்து கொடுமைப்படுவார். இதுதவிர எனக்கு குடும்ப கஷ்டம் என கூறி 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை என்னிடம் இருந்துபெற்றுக்கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் அவரது மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் விடித்து வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில், “இதுபோன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்தபோது என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். என்னை போல் இனி வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது. என்னை ஏமாற்றிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.