Apple Iphone 14 FAQs: ஐபோன் 14 பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளும், பதில்களும்!

ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் 13 ஒரே போன்று உள்ளதா?
ஆம் சிறிய மாறுதல்கள் மட்டுமே இரண்டு போன்களுக்கும் உள்ளன. ஐபோன் 14 172 கிராம் எடை மற்றும் 7.80mm அகலம் உள்ளது. ஐபோன் 13 174 கிராம் எடை மற்றும் 7.65mm அகலம் உள்ளது. Iphone 14 series Water மற்றும் Dust Proof கொண்டுள்ளதா?
இந்த போன் செராமிக் கிளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் IP 68 வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் கொண்டுள்ளது.iPhone 13 மற்றும் iPhone 14 போன்களுக்கு இருக்கும் வித்யாசங்கள் என்ன?
இந்த இரு போன்களிலும் உள்ள முக்கிய வேற்றுமைகளாக சிப், பேட்டரி, கேமரா போன்றவை ஆகும். ஐபோன் 14 கூடுதல் வசதிகளாக Apple Crash Detection Feature, Dynamic island, அதிகப்படியான திறன் போன்றவை கிடைக்கும்.ஐபோன் 14 கேமரா வசதிகள் என்ன?
இந்த ஐபோன் 14 ஐபோன் 13 மாடலில் இருக்கும் அதே 12MP+12MP கேமரா வசதி உள்ளது. இதன் 14 ப்ரோ மாடலில் பெரிய 48MP கேமரா வசதி உள்ளது.iPhone 14 Dynamic island வசதிகள் என்ன?
இந்த புதிய 14 Pro மாடல்களில் இருக்கும் சிறந்த வசதியாக இந்த Dynamic island வசதி உள்ளது. இதில் டிஸ்பிலே உள்ளே இருக்கும் நோட்ச் முலமாக நமக்கு Call, Timer, Music, Home Screen மற்றும் Lock Screen , Face ID போன்ற வசதிகள் உள்ளன.iphone 14 மற்றும் 14 Pro மாடல்களுக்கு இருக்கும் வேற்றுமை என்ன?
இந்த இரு போன்களும் அளவு ஒப்பீட்டில் மாறுபடுகின்றன. பெரிய மாற்றமாக இதன் பின்புற கேமரா உள்ளது. மேலும் Dynamic island வசதியும் உள்ளது. ஐபோன் 14 A15 Bionic chip கொண்டுள்ளது. ஆனால் இதன் 14 Pro மாடல் A16 Bionic Chip உள்ளது.ஐபோன் 14 சீரிஸ் விலை என்ன?
ஐபோன் 14 இந்தியாவில் 79 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 1,09,000 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதன் ஐபோன் 14 ப்ளஸ் 89 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்கி 1.19 லட்சம் ரூபாய் வரை உள்ளது.Apple iphone 14 உள்ளே emergency SOS உள்ளதா?
உள்ளது! இதை பயன்படுத்தி நீங்கள் ஏதாவது ஆபத்தான இடத்தில் மாட்டிக்கொண்டால் இந்த SOS மூலம் அவசர உதவியை தொடர்புகொள்ளலாம்.iphone 14 மாடலில் இருக்கும் Always on Display வசதி என்ன?
இது நமது Androdi போன்களில் இருப்பது போன்று இல்லாமல் முற்றிலும் மாறுபடுகிறது. ஸ்க்ரீன் மொத்தமாக டிம் செய்வதற்கு பதிலாக இதில் நமது அனைத்து லாக் ஸ்க்ரீன் விவரங்களும் தெரியும்வகையில் டிம் செய்யப்படுகிறது.ஐபோன் 14 கேமராவில் உள்ள முக்கிய வசதிகள் என்ன?
ஆண்ட்ராய்டு போன்களை போல இல்லாமல் இதில் சிறந்த வீடியோ தரம் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்களில் இல்லாத முன்பக்க செல்பி கேமரா மூலம் எடுக்கும் 4K வீடியோ ஐபோனில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.