குழப்பத்தின் முழு உருவம் ஓபிஎஸ்: ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணம் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமி
பங்கேற்க உள்ளார். திருமணத்தன்று 50 ஏழை எளிய திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வையிட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்க்கு நேரில் வருகை தந்தார். தொடர்ந்து, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு திருமணப் பத்திரிக்கை வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, “புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.” என்றார்.

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜன் செல்லப்பா, “குழப்பத்திற்கு முழு உருவம், சிக்கலுக்கு எடுத்துக்காட்டு முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். அவர், ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார், மறுபுறம் பாஜகாவுக்கு ஆதரவு என்கிறார், சுயேட்சையாக நிற்போம் என்கிறார். கிட்டி கண்ணன் பொய்யும் பொருட்டும் எட்டு நாள் என்ற பழமொழி போல அவரது பேச்சு உள்ளது. அதிமுக வெற்றிக்கு கலங்கம் விளைவிப்பதற்கான வழியை தேடுகிறார் ஓபிஎஸ்.” என்றார்.

எந்த வகையிலும் ஓபிஎஸ் உடன் பேசுவதற்கு வாய்ப்பில்லை எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டுவதற்காக அரசியல் அறியாத ஒரு சிலர் அணிகள் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். எதற்காக ஒன்று சேர வேண்டும் என ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய ராஜன் செல்லப்பா, “இரட்டை இலை கிடைக்கும் என்று நம்புகிறோம். இரட்டை இலை அதிமுகவிற்கு உரியது அதுதான் எங்களின் அங்கீகாரம். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருமானால் அடுத்த நாள் கூட போட்டியிட தயாராக உள்ளோம். எடப்பாடியிடம் இருப்பவர்கள் அனைவரும் எம்ஜிஆர், அம்மாவின் தொண்டர்கள்.

சட்ட திட்டங்களின்படி கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவிற்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இன்றைய சூழலில் அதிமுக எதிர்பார்ப்பது ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு. இரண்டாவது தேர்தல் ஆணையத்திடம் கிடைக்க வேண்டிய அங்கீகாரம்.” என்றார்.

பாஜகவின் நிலை இதுவரை தெரியவில்லை. இதுவரை கூட்டணியில் இருந்தோம்; இன்னமும் கூட பேச்சுவார்த்தை நடத்தி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அந்த முடிவுக்கு நிர்வாகிகள் கட்டுப்படுவோம். பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மகிழ்ச்சியோடு அவர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.