தினமலர் பட்டம் இதழ் மெகா வினாடி வினா இறுதி போட்டி: கவர்னர் பங்கேற்பு| Dinamalar Degree Magazine Mega Quiz Final : Governor Participation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுச்சேரி : ‘தினமலர் பட்டம்’ இதழ் நடத்தும் மெகா வினாடி வினா இறுதி போட்டி இன்று புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது. இதில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் , வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க உள்ளார்.

நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு, சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கில், ‘தினமலர்’ நாளிதழ், ‘பட்டம்’ எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. இது, தமிழில் வெளியாகும், ஒரே மாணவர் பதிப்பாக திகழ்கிறது.

பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில், பள்ளி அளவிலும், மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை, ‘பட்டம்’ இதழ் நடத்தி வருகிறது.

இந்தாண்டு, ஆதித்யா இன்ஸ்டிடியூட் மேனேஜ்மெண்ட் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா போட்டி, ‘வி-3’ (வினாடி வினா விருது) என்ற பெயரில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளில் கடந்த நவம்பர் மாதம் கோலாகலமாகத் துவங்கியது. மொத்தம் 80 பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முதற்கட்ட போட்டியில் வென்ற ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதிச்சுற்று வினாடி வினா போட்டி இன்று 21 ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை பிரமாண்டமாய் நடக்கிறது. இறுதி போட்டியில் முதல் பரிசு பெறும் அணியில் உள்ள இரண்டு மாணவர்கள்,இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை, நேரில் சென்று பார்க்கும் அரிய வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

வினாடி வினா போட்டியில் அடுத்தடுத்த இடங்களை அட்டகாசமான பரிசு பொருட்கள் காத்திருக்கிறது. வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை பரிசு வழங்க உள்ளார்.

நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா அமைச்சக தெற்கு மண்டல இயக்குனர் முகமது பரூக், ஆதித்யா குரூப் ஆப் இன்ஸ்ட்டிடியூஷன் சேர்மன் அசோக் ஆனந்த் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில், தமிழிசை சவுந்திரராஜன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க உள்ளார்.

உங்களது பள்ளியின் பெருமையை இஸ்ரோ வரை எடுத்துச் செல்ல, அருமையான தளத்தை ‘தினமலர்’ மாணவர் பதிப்பான பட்டம் இதழ் ஏற்படுத்தி தந்துள்ளது. பள்ளி முதல்வர்களே…. தலைமையாசிரியர்களே…. மாணவ செல்வங்களே… இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாம காண வாருங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.