தீப்பற்றி எரிந்த காரில் சிக்கி கொண்ட பெண்: விரைந்து செயல்பட்ட பொதுமக்கள்: வீடியோ


அமெரிக்காவின் நியூயார்க் நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த காரில் சிக்கி கொண்டு இருந்த பெண் ஒருவரை தைரியமான பொதுமக்கள் கூட்டம் ஒன்று காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தீப்பற்றி எரிந்த கார்

நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த நிலையில், காரில் சிக்கி இருந்த பெண்ணை பொதுமக்கள் குழு ஒன்று காப்பாற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ஹோல்ட்ஸ்வில்லில் (Holtsville) திங்கட்கிழமை நண்பகலில் வாகன விபத்து ஒன்று நடந்ததாக suffolk கவுண்டி காவல்துறை Fox5 NYயிடம் தெரிவித்தது. 

மேலும் ஃபார்மிங்வில்லியைச்(Farmingville)  சேர்ந்த 56 வயதான சூசன் டெனிஸ் 2022 ஜீப் லிபர்ட்டியை ஓட்டிச் சென்றபோது, சென்டர் மீடியனில் மோதியதாகவும், அதனால் கார் கவிழ்ந்து தீ பிடித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பெண்ணை காப்பாற்றிய பொதுமக்கள்

கார் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த போது காரினுள் பெண் ஒருவர் சிக்கி கொண்டு இருப்பதை கவனித்த பொதுமக்கள் குழு ஒன்று விரைந்து சென்று பெண்ணை உடனடியாக வெளியே இழுத்தனர்.
 

தீப்பற்றி எரிந்த காரில் சிக்கி கொண்ட பெண்: விரைந்து செயல்பட்ட பொதுமக்கள்: வீடியோ | Rescuing Woman Burning Car Expressway New York

இது தொடர்பாக வெளியான வீடியோவில், பொதுமக்கள் குழுவில் உள்ள ஒருவர் எதிரே வரும் போக்குவரத்தை மெதுவாக்கும் முயற்சியில் ஒருவர் கையை உயர்த்தி கொண்டிருப்பதைக் காணலாம். 

Fox5 NY அறிக்கையின் படி, டெனிஸ்  உள்ளூர் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார் என்று தெரியவந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.