சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா… பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல்


மத்திய லண்டனில் ஆடம்பர ஊர்வலத்துடன் மூன்று நாட்கள் கொண்டாட இருப்பதாக மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா தொடர்பில் பகிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஏற்பாடுகள் தொடர்பில் முதல் முறையாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் பிரபலமான பாடகர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இசை விழாவும், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் வகையில் தெருக்களில் விருந்துகள் ஏற்பாடு செய்யவும் அரண்மனை முடிவு செய்துள்ளது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா... பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல் | Charles Coronation Three Day Bash Three Day Bash

Credit: Times Newspapers Ltd

ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் பங்கேற்கும் இரு பிரமாண்ட ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த கொண்டாட்டங்களில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி பங்கேற்பார்களா என்பது தொடர்பில் எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை.

ஆனால் இந்த விழாவானது ராணியாரின் ஜூபிலி விழா போன்று சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி தொடங்கி திங்கட்கிழமை 8ம் திகதி வரையில் சிறப்பிக்க உள்ளனர்.
மே 8ம் திகதி பொது விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா... பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல் | Charles Coronation Three Day Bash Three Day Bash

@getty

மேலும், மொத்த மக்களும் பசியாறும் வகையில் மதிய உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது.
இந்த முடிசூட்டு விழாவானது, பிரித்தானிய மக்கள் தங்கள் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நேரத்தை செலவிடவும் கொண்டாடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயம்

மே 6ம் திகதி பகல் சார்லஸ் மன்னரும் மனைவியும் வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்திற்கு ஊர்வலமாக வருகை தருவார்கள்.
மேலும், இதுவரை எவருக்கும் முடிசூட்டு விழா தொடர்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அரண்மனை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா... பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல் | Charles Coronation Three Day Bash Three Day Bash

Credit: Splash News

இருப்பினும், ஹரி தமது குடும்பத்துடன் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார் என்றே நம்பப்படுகிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் 90 நிமிடங்கள் நீளும் ஆரதனை முன்னெடுக்கப்படும்.

இந்த சிறப்பு அராதனையில் 2,000 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது.
ராணியாரின் முடிசூட்டு விழாவில் 8,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன் பின்னர், மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் கமிலா ஆகியோர் சிறப்பு ஊர்வலமாக அரண்மனை திரும்புவார்கள்.

இந்த ஊர்வலத்தில் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான ரானுவ வீரர்கள், ராணுவ இசைக்குழு, சிறப்பு விருந்தினர்கள் என திரளானோர் கலந்துகொள்வார்கள்.
ஞாயிறன்று விண்ட்சர் கோட்டையில் சிறப்பு இசை விழா முன்னெடுக்கப்படுகிறது. இதில் பிரபலமான இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா... பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல் | Charles Coronation Three Day Bash Three Day Bash

Credit: Doug Seeburg



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.