ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் பயணிகள் தவிப்பு… ஹீத்ரோ விமான நிலையத்தின் முடிவால் அதிர்ச்சி


லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய 80க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுமார் 12,000 பயணிகள்

கடுமையான மூடுபனி மற்றும் வெப்பநிலை -8C என சரிவடைந்த நிலையிலேயே விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 12,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் பயணிகள் தவிப்பு... ஹீத்ரோ விமான நிலையத்தின் முடிவால் அதிர்ச்சி | Freezing Fog Heathrow Airport Cancels Flights

@getty

ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், மிலன் மல்பென்சா, பாரிஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்களே ரத்தாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரங்களுக்கு முன்னர் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறன்று உள்ளூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மட்டுமின்றி, ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

15% விமானங்கள் ரத்தாகியுள்ளது

இதுவரை சுமார் 15% விமானங்கள் மூடுபனி காரணமாக ரத்தாகியுள்ளது. மேலும், மூடுபனி காரணமாக ஹீத்ரோ விமான நிலையம் விமானங்களின் எண்ணிக்கையும் குறைத்துக் கொண்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் பயணிகள் தவிப்பு... ஹீத்ரோ விமான நிலையத்தின் முடிவால் அதிர்ச்சி | Freezing Fog Heathrow Airport Cancels Flights

@Shutterstock

இதனிடையே பனிமூட்டம் காரணமாக CalMac படகு சேவையும் ரத்தாகியுள்ளது. மேலும் வெசெக்ஸ் மற்றும் பிரைட்டன், ஹோவ் மற்றும் சசெக்ஸ் இடையேயான ரயில் சேவையும் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் கவனமாக பயணங்களை தொடர வேண்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.