உ.பி.,யில் ஏழைகளுக்கு இலவசமாக உடைகள் வழங்கும் ஷாப்பிங் மால்| A shopping mall in UP that provides free clothes to the poor

லக்னோ : உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபலமான, ‘ஷாப்பிங் மால்’ ஒன்றில், ஏழைகளுக்கு உதவும் நோக்கில் குளிர்காலத்துக்கு ஏற்ற உடைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு லக்னோவில் ரஹீம் நகரில் ‘அனோஹா மால்’ என்ற பெயரில் ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் இதர மக்களிடம் இருந்து தானமாக பெறப்படும் குளிரில் இருந்து தற்காத்து கொள்ளக்கூடிய உடைகள், பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படும்.

இவற்றை, ரிக்ஷா ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் போன்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஷாப்பிங் மால் உரிமையாளர் அகமது ரசா கான்கூறியதாவது:

குளிர்காலத்தில் வாடும் ஏழைகளை காக்கும் நோக்கில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

முதலில் உதவும் நபர்கள் சற்று தயங்கினர். பின், எங்களின் நோக்கத்தை அறிந்து மனமுவந்து தங்களால் இயன்றவற்றை அளித்து உதவி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 4,000 பேர் வரை இதனால் பயன்அடைந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.