மோர்பி பாலத்தை பராமரித்த நிறுவன எம்.டி.,க்கு கைது வாரன்ட்| Arrest warrant for MD, the company that maintained Morbi Bridge

மோர்பி :குஜராத்தில், தொங்கு பாலம் அறுந்து விழுந்த விவகாரத்தில், அந்த பாலத்தை பராமரித்து வந்த, ‘ஒரேவா’ குழுமத்தின் நிர்வாக இயக்குனரை கைது செய்ய, நீதிமன்றம் ‘வாரன்ட்’ பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மோர்பி நகரின் மச்சுச்சூ ஆற்றின் மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் இருந்தது.

இது, கடந்த ஆண்டு அக்., 30ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.

இந்த பாலத்தை இயக்கி பராமரித்து வந்த, ‘ஒரேவா’ குழுமத்தைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை மாநில அரசு நியமித்தது. இந்த குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில், பாலத்தை பராமரித்து வந்த, ‘ஒரேவா’ குழுமம், மிக அலட்சியமாக செயல்பட்டதே விபத்துக்கு காரணம் என, விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, ‘ஒரேவா’ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலை கைது செய்ய, ‘வாரன்ட்’ பிறப்பிக்கும்படி, மோர்பி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெய்சுக் படேல் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ள நிலையில், அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து நீதிபதி எம்.ஜே.கான் நேற்று உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.