ஒரே நாளில் 50 நகரங்களில் Jio 5G! தமிழ்நாட்டில் 11 நகரங்களில் வெளியீடு!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான Reliance Jio தற்போது இந்தியாவில் ஒரே நாளில் 50 நகரங்களுக்கு Jio True 5G சேவையை அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, தருமபுரி, ஓசூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய நகரங்களில் இப்போது 5G சேவை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு Jio Welcome Offer கிடைக்கும். அதன் பிறகு அவர்களால் 1GB/PS வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம். இதற்காக தனியாக நாம் எந்த ஒரு பணமும் செலுத்தத்தேவையில்லை. ஆனால் இந்த Welcome Offer கிடைக்க அவர்கள் 239 ரூபாய்க்கு மேல் மாத ரீசார்ஜ் செய்திருக்கவேண்டும்.

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் இப்போது 5G சேவை வந்துவிட்டதால் இனி அந்த நகரங்களின் தொழில்துறை மற்றும் இணைய சேவை என்பது பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஜியோ நிறுவனம் தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.

இந்த அறிமுகம் மூலமாக இனி இந்தியாவில் 184 நகரங்களில் இந்த JIO 5G சேவை கிடைக்கும். இதை ஜியோ நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய 5G அறிமுகம் என்று தெரிவித்துள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் இந்த 5G சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அதற்கான முயற்சிகளை வேகமாக எடுத்துவருவதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ 5G சேவைகளின் நம்மைகள்

4G தொடர்பான எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனியாகவே இது இயங்கும்.இந்தியாவில் கிடைக்கு மிகப்பெரிய 5G அலைக்கற்றை அளவான 700MHZ, 3500MHZ, 26GHZ ஆகியவை ஜியோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.ஒரே ஒரு தனிப்பட்ட 5G அலையில் நமக்கு 5G நெட்ஒர்க் கிடைப்பதால் தடையின்றி நாம் பயன்படுத்தமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.