பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நடப்பு 2023 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி கூடுகிறது. மரபுப்படி அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.

குடியரசு தலைவர் உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு வருகிற 31 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற ?உள்ளது. இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரி உள்ளது. அத்துடன் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 30 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவது என்பது வழக்கமாக ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.