கும்பாபிஷேகத்துக்கு கோலகலமாக தயாராகும் பழனி முருகன்! சிறப்பு ரயில்கள் பற்றிய முழு விவரம்

பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆறாம் கால யாக பூஜையுடன் இன்று துவங்கியது. தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
என்றூழ் பிரகாசத்தில்
எழிலாக மின்னிடும்
உன் சுத்தவொளி முகங்கள் ஆறையும் .,
மாலை வெயில் பிடித்து
அடைத்து வைத்தே
இரவிலும் ரசித்து கிடப்பேன்
என் சிவசுப்ரமணிய கடவுளே!
image
அத்தனுனை ஆராய்ந்து – இனி
செத்தவனாய் ஆன்துறந்து – உனை
எத்தனித்தலைந்து தேடி – நுன்
தனித்தன்யாதன் கலந்து – யான்
மேன்மை அடைவதெப்போது ??
என் அருத்தனே!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ஆம்தேதிலியிருந்து யாகாசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆறாம் கால யாகபூஜையுடன் துவங்கிய பழநி கோவில், கும்பாபிஷேகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
image
இன்று அதிகாலை பழனி மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவில், படிப்பாதையில் உள்ள இடும்பன் கோவில், கடம்பன்கோவில், கருப்பண்ணசாமி கோவில், கிரிவீதியில் உள்ள ஐந்து மயில்கள் கோவில் உட்பட 80க்கும் மேற்பட்ட திருக்கோவில் மற்றும் தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி நடைபெற்றதை தொடர்ந்து காலை 9.50மணி அளவில் அங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
<iframe width=”853″ height=”480″ src=”https://www.youtube.com/embed/XuByJLe8GZw” title=”LIVE: வள்ளி மயில்நாதனே வா வடிவேலேனே…-  பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேரலை” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>
தொடர்ந்து நாளை காலை பழநி மலைக்கோவில் மூலஸ்தான தங்க விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலவர் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பழனி வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடம், கும்பாபிஷேகத்தை தடையின்றி காண ஆங்காங்கே எல்.இ.டி திரைகள், மூன்று இடங்களில் அன்னதானம் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறாம் கால யாகசாலை பூஜை கும்பாபிஷேகத்தின் போது குறைவான அளவிலேயே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
image
சிறப்பு ஏற்பாடுகள்:
பொங்கலை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை-திண்டுக்கல் இடையிலான சிறப்பு ரயில் சேவை கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி வழியாக இயக்கப்பட்ட இந்த ரயில் சேவையை, பழநி கோயில் கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பழனி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இயக்கப்படும் கோவை-திண்டுக்கல் இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06077) வரும் 27, 28, 29, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய நாட்களில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
image
இதேபோல, திண்டுக்கல்-கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06078) வருகிற 27, 28, 29, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய நாட்களில் மதியம் 2 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும். செல்லும் வழியில் இந்த ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பேட்டை ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.