விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பறை இசை கலைஞர் வேலு திருமண விழாவில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசியதாவது “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
இதைப்பற்றி கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தேவையில்லை. வெற்றி என்பது காங்கிரஸ் வேட்பாளருக்கு உறுதியான ஒன்று. எதிர்க்கட்சியினர் பல திசைகளில் பிரிந்து கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினாலும் வெற்றி என்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கு தான்.
நாங்கள் மது விலக்கை கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை. மது விற்பனை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதை படிப்படிப்படியாக நிறைவேற்றுவோம்” என செய்தியாளர்களை சந்திப்பில் திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது “திமுகவின் முதல் கையெழுத்து மது விலக்கிற்கான கையெழுத்தாக தான் தலைவரின் கையெழுத்து இருக்கும்” என கனிமொழி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரொம்ப தப்பு அத்தை மாத்தி பேசுவது.
என்ன அத்தை @KanimozhiDMK நீங்க பேசுனது தான???? pic.twitter.com/0fa1Z2pbjQ
— Thirumathi Saseekumar (@TSaseekumar) January 29, 2023