Odisha Minister Naba Das: அமைச்சர் மீது காவலர் துப்பாக்கிச்சூடு… நெஞ்சில் இரண்டு குண்டுகள் – ஒடிசாவில் பயங்கரம்

Odisha Health Minister Naba Das: ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது இன்று (ஜன. 29) துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது. ஜார்சுகுடா மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்காக சென்றுகொண்டிருந்தபோது, பிரஜ்ராஜ்நகர் பகுதியில், உதவி காவல் துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ் என்பவாரல் அமைச்சர் சுடப்பட்டார். 

இந்த தாக்குதல் சம்பவம் மதியம் 1 மணியளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் காரில் இருந்த இறங்கிய நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சரின் மார்பு பகுதிஸல் இரண்டு குண்டுகள் பாய்ந்ததாகவும், ரத்த வெள்ளத்தில் காரில் வைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது.  தற்போது மேல் சிகிச்சைக்காக வான்வழியாக அவர் தலைநகர் புவனேஷ்வருக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் குப்தேஸ்வர் போய் கூறுகையில்,”உதவி காவல் துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ், அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அமைச்சர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை நாங்கள் கண்டறிய முயற்சிக்கிறோம். காவலர் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

முதற்கட்ட தகவலின்படி, காவலர் கோபால் தாஸ் தன்னிடம் இருந்த ரிவால்வரை வைத்து அமைச்சர் நபா கிஷார் தாஸை சுட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயன் கண்டனம் தெரிவித்தார். 

முதலமைச்சர் கண்டனம் 

இதுகுறித்து அவர் கூறுகையில்,”அமைச்சர் நாபா தாஸ் மீதான துரதிர்ஷ்டவசமான தாக்குதலால் நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் மீதான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.

“குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்பிரிவின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று பட்நாயக் மேலும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.