பெட்ரோல், டீசல் விலை பாக்.,கில் கிடு கிடு உயர்வு| Petrol and diesel prices are increasing gradually

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசு, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 35 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.

பெட்ரோல், டீசல் தவிர மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்துவதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் நேற்று அறிவித்தார். இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் வழிகாட்டுதலின்படி இந்த பெட்ரோலிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் படி, ஒரு லிட்டர் டீசல் 262 ரூபாய், பெட்ரோல் 249 ரூபாய், மண்ணெண்ணெய் 189 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.