“ஒட்டுமொத்த உலகமும் நமது பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது" – பிரதமர் மோடி

2023-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியாவின் முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்த இருக்கிறார். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிதமர் மோடி, “பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதன் தொடக்கத்திலேயே, பொருளாதார உலகின் நம்பகமான குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கை மற்றும் உற்சாகத்தையும் கொண்டு வந்துள்ளன.

இன்று முதன்முறையாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றுவது முக்கியமானது. நாடாளுமன்றத்தில் பட்டியலின குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றும் முதல் உரை இது. நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், குறிப்பாகப் பெண்களுக்கான மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் மீது தனது பார்வையை வைத்துள்ளது.

பிரதமர் மோடி

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் வரவு செலவுத் திட்டம், சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும். நமது நிதி அமைச்சரும் ஒரு பெண்தான். இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.