கர்நாடக தேர்தலில் எடியூரப்பா போட்டியிடவில்லை – மகன் விஜயேந்திரா களமிறங்க வாய்ப்பு

பெங்களூரு: தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. கடந்த 2021-ம் ஆண்டு முதுமையின் காரணமாக அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், எடியூரப்பாவை பிரதமர் மோடி டெல்லிக்கு அழைத்து தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் எடியூரப்பா ஷிமோகா, ஹுப்ளி ஆகிய இடங்களில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் உற்சாகமுடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பெங்களூருவில் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எனக்கு 80 வயதாகிவிட்டது. அதனால் வரவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு மத்திய அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை.

எனக்கு உடலில் சக்தி இருக்கும் வரை பாஜகவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். இந்த தேர்தலில் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்காக வாக்கு சேகரிப்பேன்” என்றார்.

இதனிடையே ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.