Google Chrome தேடல் கருவிக்கு மாற்றாக இருக்கும் Brave Browser! உங்களின் Privacyக்கு முக்கியத்துவம்!

நீங்கள் எதாவது ஒரு பொருளை தேட நினைத்தால் உடனடியாக Google Chrome அல்லது Safari போன்றவற்றிற்கு சென்று தேடுவீர்கள். ஆனால் நீங்கள் தேடுவதால் நீங்கள் தேடிய விவரங்கள் உங்களுக்கு விளம்பரங்களாக தெரிவது மட்டுமல்லாமல் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பதையும் ட்ரேக் செய்வார்கள்.

பின்பு நீங்கள் வேறு எதாவது ஒரு விஷயத்தை செய்துகொண்டிருந்தாலும் நீங்கள் தேடிய பொருள் பற்றி விளம்பரங்கள் மூலமாக காட்டுவார்கள். இது உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். நீங்கள் முகநூல் அல்லது வேறு எதாவது சமூகவலைத்தளம் சென்றாலும் உங்களுக்கு நீங்கள் தேடிய பொருள் சார்ந்த விளம்பரங்கள் அதிக அளவு வரும்.

இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கும் ஆனாலும் வேறு வழியில்லாமல் மீண்டும் நீங்கள் அதேபோன்று உங்களின் தேடல்களை செய்வீர்கள். ஆனால் இது எல்லாம் இல்லாமல் உங்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தேடல் கருவி உள்ளது.

Brave Browser எனும் இந்த தேடல் கருவி
Google
Chrome தேடல் கருவிக்கு மாற்றாக இருக்கும். இதில் சென்று நீங்கள் அதே Google மூலம் தேடினாலும் நீங்கள் தேடும் விஷயத்தை யாரும் ட்ரேக் செய்யாத அளவு இது பாதுகாக்கும். முடிந்த அளவிற்கு Pop up Ads வராமல் இது பார்த்துக்கொள்ளும்.

Brave Browser பற்றிய விவரம்

இந்த தேடல் கருவி Open Source Chromium Web Core மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் Google Chrome Browser உள்ளே நீங்கள் சென்றால் எப்படி இருக்குமோ அதேபோன்ற அனுபவம் Brave Browser மூலமாகவும் கிடைக்கும்.

விளம்பரங்களுக்கு தடை

இதில் Ad Blocker மூலமாக Pop up விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முடிந்த அளவிற்கு இதில் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். உங்களுக்கு மேலும் அதிக பாதுகாப்பு வேண்டும் என்றால் Brave VPN வசதி உள்ளது.

இதில் நீங்கள் அனுமதித்தால் Brave Browser சில விளம்பரங்களையும் உங்களுக்கு காட்டும். அதற்கு உங்களுக்கு Crypto மூலமாக பணம் தரும். அதாவது (BAT) எனும் Basic Attention Token மூலமாக உங்களுக்கு அது கிடைக்கும். ஒரு BAT என்பது 0.25$ நிகராக இருக்கும். இதில் நீங்கள் எவ்வளவு நேரம் விளம்பரங்களை பார்க்கிறீர்கள் என்பதை Brave கணக்கிட்டு உங்களுக்கு Crypto தொகை வழங்கும்.

எப்படி Install செய்வது?

நீங்கள் இதை பயன்படுத்த அதிகாரபூர்வ Brave Browser சென்று இதை பதிவிறக்கம் செய்து உங்களின் மொபைல் அல்லது லேப்டாப் கருவியில் Install செய்யலாம். இது Android மற்றும் ioS என இரு கருவிகளிலும் பயன்படுத்தமுடியும் என்பதால் உங்களுக்கு Google Play Store மற்றும் Apple App Store என இரண்டிலும் கிடைக்கும்.

என்ன முடிவு?

உங்களின் தனியுரிமை முக்கியம் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த Brave Browser நிச்சயம் பிடிக்கும். ஆனால் Desktop VPN இல்லாதது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தனியுரிமை என்று வரும்போது தற்போது உலகில் பெரும்பாலும் இருக்கும் தேடல் கருவிகளை விட அதிகப்படியான பாதுகாப்பை இந்த Brave Browser நமக்கு வழங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.