கழுவதற்கு கூட தண்ணீர் கிடைக்காது | திமுக அமைச்சரை வெளுத்து வாங்கிய அன்புமணி இராமதாஸ்!

நேற்று குறிஞ்சிப்பாடி பகுதியில் நடைபெற்ற பாமகவின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது, “இந்த என்எல்சி நிறுவனத்திற்கு எந்த கவலையும், அக்கறையும் கிடையாது. இது முதலாளித்தனம். ஏதோ இவர்கள் பெரிய முதலாளி போல, நாம் கையைக் கட்டிக் கொண்டு, ‘ஐயா எனக்கு வேலை கொடுங்கள், நான் நிலம் கொடுத்தேன், எனக்கு வாழ்வாதாரம் இல்லை, வேலை இல்லை. 

எப்படியாவது வேலை கொடுங்கள்’ என்று கெஞ்சினால், அவன் முதலாளி கால் மேல் கால் போட்டு கொண்டு, ‘அதெல்லாம் கிடையாது. நீ கெளம்பு’ என்கிறான். இப்படியான ஒரு மனநிலை இருக்கின்ற என்எல்சி நிறுவனம் இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்குகே தேவை இல்லை. நீ கெளம்பு, நீ எங்களுக்கு வேண்டாம். எங்கள் வாழ்வாதாரத்தை சுரண்டி இருக்கிறாய்.

10 அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று ஆயிரம் அடிக்கு சென்று விட்டது. நான் மீண்டும் சொல்கிறேன், குறிஞ்சிப்பாடி பகுதியில் உங்க நிலத்தை எடுக்க மாட்டார்கள், எங்களுக்கு பாதிப்பு இல்லை என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், என்எல்சிக்காரன் இன்னும் தொடர்ந்து இங்கேயே இருந்தான் என்றால், பிறகு குறிஞ்சிப்பாடியில் இருப்பவர்களுக்கு கழுவுவதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. 

அது எம் ஆர் கே பன்னீர்செல்வம் உட்பட எல்லோருக்கும் தான் என்பதையும் சொல்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரியும். யார் யாருக்கு என்னென்ன பிரச்சனை வரும், எப்படி பாதிப்பு வரும் என்று. உலக அளவில் நான் பலவற்றைப் பார்த்து வருகிறேன். 

அந்த அனுபவத்தில் தான் சொல்கிறேன், ஒட்டுமொத்தமாக கடலூர் மாவட்ட மக்கள் ஒன்றாக வாருங்கள். இது நம்ம பிரச்சனை. இது அங்கு இருக்கின்ற 49 கிராம மக்களின் பிரச்சினை கிடையாது. என்எல்சிக்காரன் சும்மா இருக்க மாட்டான். இன்று 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை எடுக்க துடித்துக் கொண்டிருக்கிறான். 

என்எல்சிக்காரன் அங்கே மக்களையும் மண்ணையும் தண்ணீரையும் விவசாயத்தையும் அழித்து சுரண்டி லாபத்தை ஈட்டி, அந்த லாபத்தை ஓடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தர பிரதேஷ், ராஜஸ்தான் என வட மாநிலங்களில் 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறான். அண்மையில் 299 பேர் வேலை எடுத்தார்கள் ஜூனியர் இன்ஜினியராக, அதில் ஒருவர் கூட, இந்த மாவட்டம் அல்ல தமிழ்நாட்டைச் சார்ந்தவன் கூட கிடையாது. பிறகு எதுக்கு இந்த என்எல்சி நிறுவனம்? நீ கிளம்பி, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மாநிலங்களுக்கு சென்று விடு, நீ எங்களுக்கு வேண்டாம்” என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.