வாரம் ரூ.4.5 கோடி., இறப்பதற்குள் ரூ.1800 கோடியை செலவழித்த பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர்


பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர், இறப்பதற்கு முன் தனது ரூ.7,275 கோடி ஜாக்பாட்டில் ரூ.1800 கோடியை செலவழித்துள்ளார்.

பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர்களில் ஒருவரான கொலின் வீர் (Coline Weir), தனது பரிசுத் தொகையில் ஒரு வாரத்திற்கு £100,000 (இலங்கை பணமதிப்பில் ரூ.4.5 கோடி) வீதம் பாரிய தொகையை செலவிட்டதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

லொட்டரியில் ரூ.7,275 கோடி பரிசு

2011-ஆம் ஆண்டில், கோலின் வீர் லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை பணமதிப்பில் ரூ.7,275 கோடி) வென்றார்.

2019-ஆம் ஆண்டில் செப்சிஸ் மற்றும் கடுமையான சிறுநீரகக் காயத்தால் அவர் உயிரிழந்தார்.

வாரம் ரூ.4.5 கோடி., இறப்பதற்குள் ரூ.1800 கோடியை செலவழித்த பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர் | Uks Biggest Lottery Winner Spent 40M Before DiePC: Andrew Milligan /PA

ரூ.1800 கோடி செலவு

ஆனால், அவர் இறப்பதற்கு முன்பு அவர் வென்ற பரிசுத்தொகையில் சுமார் 40 மில்லியன் பவுண்டுகளை (ரூ.1800 கோடியை) செலவிட்டதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு அயர்ஷையரில் உள்ள லார்க்ஸைச் சேர்ந்த கொலின் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டின், யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டை வென்றபோது ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய லாட்டரி வெற்றியாளர்களாக ஆனார்கள்.

வாரம் ரூ.4.5 கோடி., இறப்பதற்குள் ரூ.1800 கோடியை செலவழித்த பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர் | Uks Biggest Lottery Winner Spent 40M Before Die Daily Mail

ஜாக்பாட்டிற்கு முன், கொலின் ஸ்காட்டிஷ் ஒளிபரப்பான STV-யில் கமெராமேனாக இருந்தார். அவரது முன்னாள் மனைவி மனநல செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

பரிசுத்தொகையில்.,

கொலின் தனது லொட்டரி பரிசுத்தொகையில் ஆடம்பர சொத்துக்கள், கார்கள் மற்றும் விளையாட்டு முதலீடுகள் மற்றும் நிறுவப்பட்ட அறக்கட்டளைகள் என பாரிய அளவிலான முதலீடுகளைக் செய்தார்.

கொலின் 2014-ல் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சிக்கு அதன் சுயாதீன பிரச்சாரத்திற்காக நன்கொடை அளித்தார், அதன்பிறகு கட்சிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்தார்.

சொகுசு கார்கள்

அவர் ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி, விண்டேஜ் பென்ட்லி ஆர்னேஜ், 2019 மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ், மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் எஸ்டேட் ஆகியவற்றை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குதிரைப் பந்தயத்திலும் முதலீடு செய்திருந்தார். அவர் இறந்தவுடன், அவர் சுமார் 212,000 பவுண்டுகள் (ரூ. 9.5 கோடி) மதிப்புள்ள நகைகள், தளபாடங்கள் மற்றும் கலைப்படைப்புகளை வைத்திருந்தார் என்பது பதிவு செய்யப்பட்டது.

கால்பந்து கிளப்

அவர் இறப்பதற்கு சற்று முன்பு, கொலின் Partick Thistle கால்பந்து கிளப்பின் 55 சதவீத பங்கையும் அதன் உரிமையை சமூகத்திற்கு திருப்பித் தரும் நோக்கத்துடன் வாங்கினார்.

வாரம் ரூ.4.5 கோடி., இறப்பதற்குள் ரூ.1800 கோடியை செலவழித்த பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர் | Uks Biggest Lottery Winner Spent 40M Before DieSNS  

2018-ஆம் ஆண்டில், அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தனது சொத்தில் முன்னாள் மனைவிக்கு ஒரு பெரும் பகுதியை கொடுத்த கொலின், அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது இரண்டு குழந்தைகளுக்கு தனது சொத்துக்கள் செல்லும் என்று எழுதிக்கொடுத்தார்.

அவர் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது எஸ்டேட்டில் இருந்து வந்த ஆவணங்கள், அவரது கவுன்சில் வரி 37.08 பவுண்டு கடனாக இருந்ததாகவும், அவர் அதிகபட்சமாக 50,000 பவுண்டுகள் தேசிய சேமிப்பு மற்றும் முதலீட்டு பிரீமியம் பத்திரங்களில் வைத்திருந்ததாகவும் காட்டப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.