கையை சுட்டுப் பொசுக்கும் சிகரெட் விலை – பட்ஜெட் அறிவிப்பும் வைரலாகும் மீம்ஸ்களும்

பட்ஜெட்டில் சிகரெட் மீதான விலை உயர்வு அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘மீம்’கள் குவிந்தன.

2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பாக, இந்தியாவில் சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் வரியை 10 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் விரைவில் சிகரெட்டுகள் மீதான விலை என்பது அதிகரிக்க உள்ளது.

image
சிகரெட், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தேசிய பேரிடர் தற்செயல் வரி (NCCD) விதிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்த ஆண்டு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. 16 சதவீத வரி அதிகரிப்பால் சிகரெட் விற்பனை வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் சிகரெட் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

சிகரெட் விலை உயர்வு குறித்த அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டரில் ஏராளமான மீம்ஸ்கள் பகிரப்பட்டன.

Sutte ka price badh gaya:#UnionBudget2023 #Budget2023 #BudgetSession #cigarettes pic.twitter.com/hIeDJUoalc
— Srishti Yadav (@_srishti_yadav_) February 1, 2023

#Budget2023
16% increase on certain cigarettes.

smokers: pic.twitter.com/MF8jKByQKw
— Tanmay Sinha (@srcasticwriter) February 1, 2023

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.