சுய தொழில் செய்வோருக்கு வருமான வரி இல்லை…!

மத்திய நிதி -மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்

அதில்,

  • சுய தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்களின் மாத வருமானம் ரூ.58,250 வரை இருந்தால் வருமான வரி இல்லை.
  • புதிய வருமான வரி திட்டத்தின் படி மாதம் ரூ.62,500 வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
  • ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறுகுறி தொழில்களுக்கு பிணையில்லா கடன்கள் வழங்கப்படும்.
  • ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை.
  • மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி.
  • இயற்கை உரங்களை ஊக்குவிக்க “பிஎம் பிரணாம்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.
  • நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
  • அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.