பட்ஜெட் 2023 – 24 : யார் யாருக்கு ? எத்தனை சதவீதம் வரி ?

புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு. ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை வருமானம் பெறுகிறவர்கள் ரூ.45,000 வரி செலுத்தினால் போதுமானது. தனிநபருக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்து 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் விலக்கு பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு.

யார், யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்.?

ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானத்தில் 5% வரி செலுத்த வேண்டும்

ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 10% வரி செலுத்த வேண்டும்.

ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 15% வரி செலுத்த வேண்டும்.

ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 20% வரி செலுத்த வேண்டும்.

எளிதாக ரிட்டர்ன் தாக்கல் செய்ய புதிய ஐடி ரிட்டர்ன் படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் 16 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் 93 நாட்களில் இருந்து 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.