Pathu Thala: நம்ம சத்தம்.. அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பு: தெறிக்கும் இணையம்.!

சிம்புவின் ‘பத்து தல’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ளது. கடந்த வருடம் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து தற்போது ‘பத்து தல’ படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் காத்து வருகின்றனர். இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தை கலக்கி வருகிறார்.

‘மாநாடு’ படத்தின் மூலம் பிரம்மாண்ட கம்பேக் கொடுத்த சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க கமிட் ஆனார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் ‘பத்து தல’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

Karthi: பிரம்மாண்டமாக உருவாகும் ‘பையா 2’: கார்த்திக்கு பதிலாக களமிறங்கும் பிரபல ஹீரோ.!

இந்நிலையில் நாளை மதியம் 12:07 மணிக்கு ‘பத்து தல’ படத்தின் ‘நம்ம சத்தம்’ எனும் முதல் சிங்கிள் பாடல் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்தப்பாடலின் சிம்புவின் அசத்தலான நடன அசைவுகளோடு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi: 3 வருடங்களுக்கு பிறகு துவங்கிய விஜய் சேதுபதி படம்: தாறுமாறு கூட்டணி.!

இந்தப் படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘பத்து தல’ படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.