Thalapathy 67: விஜய்க்கு அந்த படங்கள் பிடிக்காது..கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன்..SAC ஓபன் டாக்..!

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக வலம் வருகின்றார். இன்றைக்கு அவரது கால்ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் தவம் இருக்கின்றனர். அந்த அளவிற்கு அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துள்ளது. ஆனால் அவர் நடிக்க வந்த புதிதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கடுமையான விமர்சனங்களும், அவமானங்களும் தான் கிடைத்தது. இருப்பினும் அவர் மனம் தளராது தொடர்ந்து போராடி வந்தார். அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான் இன்று தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார். இந்நிலையில் இவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் தான் இவரின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

Thalapathy 67: அனைவரும் எதிர்பார்த்த தளபதி 67 டைட்டில் இதுதானா ?

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய்யை அறிமுகம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்து ஐந்து படங்களை விஜய்யை வைத்து இயக்கினார். மேலும் ரசிகர்களின் மனதில் விஜய்யை ஹீரோவாக நிலைநிறுத்தி அவருக்கான கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நாயகனாக உருவாக்கினார் SAC .

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யை கட்டாயப்படுத்தி சில படங்களில் நடிக்கவைத்ததாகவும், அதன் காரணமாக அவரின் சம்பளம் உயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். விஜய் ஆரம்பகாலகட்டத்தில் காதல் படங்களில் தான் நடித்து வந்தார். அவர் நடித்த காதல் படங்களில் மிகமுக்கியமான படங்கள் தான் நினைத்தேன் வந்தாய் மற்றும் ப்ரியமானவளே.

செல்வபாரதி இயக்கத்தில் வெளியான இவ்விரு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இந்நிலையில் இப்படங்களில் விஜய்க்கு நடிக்க ஆர்வம் இல்லையாம். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை உனக்கு கொடுக்கும், அதன் காரணமாக உன் சம்பளம் உயரும் என கூறி கட்டாயப்படுத்தி விஜய்யை நடிக்கவைத்தாராம்.

எனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வற்புறுத்தலின் பெயரில் தான் விஜய் அப்படங்களில் நடித்தார். அப்படங்களை விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.