சீனாவின் அடாவடிதனத்தை சகித்து கொள்ள முடியாது; அமெரிக்கா ஹீட்.!

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962ம் ஆண்டு சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. இந்த தோல்வி குறித்த சிந்தனையிலேயே பிரதமர் நேரு உடல் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கல்வானில் சீன ராணுவ வீரர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது.

ஆனால் நான்கு ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீனா உறுதி செய்தது. அனால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய நாளிதழில் வெளியிட்ட செய்தியின்படி கல்வானில் நான்கு சீன வீரர்கள் அல்ல, சீனாவுக்கு அதை விட பல மடங்கு இழப்பாக குறைந்தது 38 வீரர்கள் வரை இறந்ததாகக் கூறியிருந்தது.

இப்படியாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கல்வான் மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையேயும் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அதேபோல் தைவானையும் தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறிவருகிறது. ஆனால் சுதந்திரமான தனி நாடு என தைவான் கூறுவதால், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீனா மிரட்டி வருகிறது. அதனால் அமெரிக்காவின் உதவியை நாடிய தைவானுக்கு, ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேபோல் தென் சீனக்கடல் பகுதி மொத்தத்தையும் தனக்குறியதாக சீனா கூறிவருவதால் உலகநாடுகள் அதிருப்தியில் உள்ளன.

சீனாவின் இத்தகைய அடவாடிப்போக்குகளை கண்டிக்க அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் சீனாவின் மோசமான மனித உரிமை மீறல்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அதன் கூட்டாளிகள் மற்றும் இந்தியா, தைவான் மீதான ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்குப் சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் வருகிற 5ம் தேதி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளநிலையில், குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். சீனாவின் அடாவடித்தனத்தை இனிமேலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அடிப்படை உரிமை மீறல்களுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். சீனாதான் அமெரிக்காவின் ஒரே போட்டியாளர் என அதிபர் பைடன் அறிவித்தது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.