அரசு பாடசாலை ஆசிரியராக இருந்து பயங்கரவாதியாக மாறிய நபர் கைது! நூதன வெடிகுண்டை கைப்பற்றிய பொலிஸார்


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதியை கைது செய்த பொலிஸார், வாசனை திரவிய வெடிகுண்டை கைப்பற்றினர்.

ஆசிரியராக இருந்த பயங்கரவாதி

ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் ஜனவரி 21ஆம் திகதி அன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 9 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரியாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரிப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினைச் சேர்ந்த பயங்கரவாதி என்று தெரிய வந்தது.

மேலும், அவர் அரசு பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அரசு பாடசாலை ஆசிரியராக இருந்து பயங்கரவாதியாக மாறிய நபர் கைது! நூதன வெடிகுண்டை கைப்பற்றிய பொலிஸார் | Terrorist Arrest Jammu Kashmir Perfume Bomb Taken

@PTI Photo

வாசனை திரவிய வெடிகுண்டு

அவரிடம் இருந்து மீட்கப்பட்ட வாசனை திரவிய போத்தலை அழுத்தினாலோ அல்லது திறக்க முயன்றாலோ வெடித்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டது.

யூனியன் பிரதேசத்தில் இந்த வகையான வெடிகுண்டு மீட்கப்பட்டது இதுவே முதல் முறை என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசு பாடசாலை ஆசிரியராக இருந்து பயங்கரவாதியாக மாறிய நபர் கைது! நூதன வெடிகுண்டை கைப்பற்றிய பொலிஸார் | Terrorist Arrest Jammu Kashmir Perfume Bomb Taken

கைது செய்யப்பட்ட ஆரிப், பாகிஸ்தானிய கையாளுவோரின் உத்தரவின் பேரில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது கடந்த ஆண்டு மே மாதம், வைஷ்ணோ தேவி யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்டார்.   





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.