அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!?

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலைவாசி உயர்வை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படுகிறது. கடைசியாக கடந்த செப்டம்பா் மாதம் 4 சதவீதம் உயா்த்தி அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளா்களும், ஓய்வுதியதாரா்களும் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறும் தகுதியை பெற்றனர். இந்நிலையில் தற்போது அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட நுகா்வோா் விலைக் குறியீட்டின்படி அகவிலைப்படி உயா்வு 4.23 சதவீதமாக இருக்க வேண்டும். தசம புள்ளிகளில் அகவிலைப்படியை உயா்த்த விரும்பாத மத்திய அரசு, 4 சதவீதம் மட்டும் உயா்த்த திட்டமிட்டுள்ளது.

42% அகவிலைப்படி முன்மொழிவை மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சகத்தின் செலவினத் துறை விரைவில் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 4 சதவீத அகவிலைப்படி உயா்வு, இந்தாண்டின் தொடக்கம் முதலே முன்தேதியிட்டு அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.